பொய்மருதாணி

மருதாணி ஒரு கேள்விக்குறி
Marina beach போன்ற இடங்களில் மருதாணி ப்போன்ற colorஒன்றை அச்சில் தொட்டு கைகளில் வைக்கிறார்கள். ஆனால், அது உண்மையான மருதாணி கிடையாது . அது எப்படி செய்வது என்பது யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்ங்களேன்.

thamizhi

எப்படி இருக்கீங்க? என்ன ஒரு தமிழ் பெயர் சூப்பர். உங்க உண்மையான பெயர் இதானா மேடம். மெரீனா கடற்கரையில் செய்யும் மருதாணி எப்படி செய்வது என்று தெரியாது ஆனால் பொய் மருதாணி சீரகத்தை கொண்டு செய்யும் மருதாணி தெரியும். இது அந்த மருதாணியை விட நல்லா இருக்கும் அதோடு அதிக நாட்களும் இருக்கும். வீட்டில் இருக்கும் ஒரு பழைய தகர டப்பாவில்(பால் டின்) தண்ணீர் ஊற்றி ஒரு சிறிய கிண்ணத்தில் சீரகம் மற்றும் சீனியை சேர்த்து வைத்து டப்பாவை மூடி விட்டு அந்த தகர டப்பாவை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். சீரகம் கருகி சீனியுடன் சேர்ந்து அதில் வேர்தண்ணி அதில் விழுந்து ஒரு வித வாசனை வரும் அப்போது எடுத்து விடவும். டப்பாவில் வைக்கும் தண்ணியின் அளவு, கிண்ணம் மேலே எழும்பி மிதக்காத அளவு வைக்கவும். மருதாணி ரெடியானதும் அதில் தேவையான அளவு குங்குமம் கலந்து கையில் இடலாம்.

ஹலோ நந்தினி, உங்களுக்கு எனது வணக்கம்.
உண்மையில் என் பெயர் தமிழிதான்.
உடனே என் சந்தேகதை தீர்த்து வைத்திற்கு மிக்க நன்றி.
நீங்கள் கொடுத்துள்ள குறிப்பினை செய்து பார்த்து விட்டு எப்படி வந்தது என்று சொல்கிறேன்.
மீண்டும் நன்றி

தமிழி

நந்தினி29 எனக்கு ஒரு சந்தேகம்..
இதை தகர டப்பாவில் தான் செய்ய முடயுமா ??
சீரகம் , சக்கரை சேர்ந்து கருகி அதில் தண்ணீர் விழுந்து கிடைக்கும் அந்த தநீரில் கும்கும் கலக்க வேண்டும்...நான் சொல்வது சரியா ..
மேலும் சீரகம் ,சக்கரை அளவு எதுவும் இல்லையா ??
நீங்கள் சொல்லும் மருதாணியில் குச்சி கொண்டு டிசைன் போட தான் முடயுமா ??
அது எனக்கு வராது ..
நாம் கையில் வைக்கும் நிஜ மருதாணி போன்று வட்டம், குப்பி போட முடயுமா ??

சொல்லுங்களேன்..
செய்ய ஆர்வமாக உள்ளேன் ..
தகர டப்பா அவசியம் வேண்டுமா ??

நானும் இதை தகர டப்பாவில் செய்வதைப் பார்த்திருக்குறேன்...இதை அதில் மட்டுமே செய்ய முடியும் என்று தோன்றுகிறது...ஆனால் ஒரு முறை ட்ரை பன்னினேன் செய்ய..அதோடு மருதாணி ஆசை விட்டுவிட்டது..அப்படி ஒரு வாடை..இப்பொழுதும் மூக்கு எரிகிறது அந்த வாடையை நினைத்தால்

தமிழி உங்க பெயர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதான் கேட்டேன். நிச்சயம் செய்து பாருங்கள்.
அம்மு, உங்க பேரில இன்னுமொருத்தவங்க இருக்காங்க அதான் பாலாஅம்முன்னு சொன்னேன். இதிலயும் கைக்கு கொப்பி, வட்டம் டிசைன் எல்லாம் போடலாமே. ஆமாம் குச்சிக் கொண்டு தான் போட வேண்டும். அளவு இரண்டின் அளவும் ஒரே சமமாக எடுத்துக் கொள்ளவும் அதோடு இதை தகர டப்பாவில் தான் செய்ய வேண்டும் மற்ற பாத்திரத்தில் செய்தால் பாத்திரம் வீணாகிவிடும். முதலில் கொஞ்சம் செய்து பாருங்கள்.

இது ரொம்ப ந்ல்லா வரும்...நானும் பார்த்து இருக்கேன்...ஆனால் முஸ்லிம்களுக்கு தொழுகைக்கு கூடாது.....அதனால் அதை பண்ணுன் ஆசை விட்டு போய்ட்டு....மெகந்தி மட்டும்தான் நகத்தில் வைப்பேன் அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பொய் மருதாணி

அன்புடன் நந்தினிக்கு,நலமா? இன்று நீங்கள் கூறியதுப் போல் மருதாணி செய்துப்பார்த்தேன், இதுதானே முதல் தடவை, அதனால் சரியாக வரவில்லை. எனது சந்தேகத்திற்கு தயவு செய்து பதில் அளியுங்கள். 1.1மணி நேரதிற்கு மேல் ஆனது.இது correct timeஆ? 2.டப்பாவில் நாம் முதலில் ஊற்றிய தண்ணீர் கடைசி வரை இருக்க வேண்டுமா என்ன? 3.அந்த சின்ன கிண்ணத்தில் வேர்த்தண்ணீர் விழவேண்டுமா? 4.நடுவில் திறந்து பார்க்கலாமா? 5. அந்த தண்ணீரில் தான் குங்குமம் கலக்க வேண்டுமா?

தமிழி

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? மருதாணி செய்துட்டீங்களா? ஆமாம் தமிழி 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஏனென்றால் தண்ணீர் நன்கு சூடாகி கொதித்து அதன் ஆவி படர்ந்து வேர்வை தண்ணீர் விழ வேண்டும். கிண்ணத்தில் தான் அந்த தண்ணீர் விழும். திறந்து பார்க்கலாம் ஆனால் அடிக்கடி பார்க்க வேண்டாம். தண்ணீர் போதுமான அளவு இருக்கா என்பதை பார்த்துக் கொள்ளவும். இல்லையென்றால் டப்பாவில் தண்ணீர் ஊற்றவும். அந்த கிண்ணத்தில் உள்ள கலவையுடன் உள்ள தண்ணீரில் தான் குங்குமம் சேர்க்க வேண்டும்.வாசனை வந்ததா தமிழி? சிறிய கிண்ணத்தில் வைக்கவும். டப்பாவில் உள்ள தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள்.

ஹலோ நந்தினி சுகமா?
நான் தண்ணீர் நடுவில் ஊற்ற வில்லை, அதனால் தீய்ந்துகருகி பஷ்பமாகி விட்டது. மீண்டும் செய்து பார்த்துவிட்டு செல்கிறேன். குங்குமம் கண்டிப்பாக கலக்க வேண்டுமா?
மீண்டும் சந்திப்போம்.
தமிழி

நானும் இதை போல செய்து இருக்கன் இப்ப இல்ல நான் காலேஜ்ல படிக்கும் போது. தண்ணீர் தான் ரொம்ப முக்கியம் அந்த தண்ணி கொதுச்சு தான் தளம்பி இதில் விழும் அதனால தண்ணி இருக்கான்னு பாத்துக்கோங்க.
நந்தினி நீங்க சொல்றதுக்கு பதில் நான் சொல்லிட்டன் பரவாயில்லையா, மேடம் நீங்க வந்து விவரமாக சொல்லுங்க. எனக்கு தெரிந்தவரை சொல்லிட்டேன்.

மேலும் சில பதிவுகள்