www.arusuvai.com
தந்தூரி இறால் டீப் பிரை
தேவையானப் பொருட்கள்
- இறால் - அரை கிலோ
- தந்தூரி மசாலா - இரண்டு தேக்கரண்டி
- காஷ்மீரி மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபுள் ஸ்பூன்
- உப்பு - இரண்டு தேக்கரண்டி
- சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
- எண்ணை - ஆறு தேக்கரண்டி
- கருவேப்பிலை - சிறிது
- கொத்துமல்லி - சிறிது
- லெமென் ஜூஸ் - ஒரு பழம்
செய்முறை
- இறாலை நல்ல சுத்தம் செய்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை கத்தியால் கீறி எடுத்து விட்டு நன்கு மஞ்சள் தூள் போட்டு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
- முதலில் இறாலை லேசாக மஞ்சள் தூள் , அரை லெமென் ஜூஸ் பிழிந்து சிறிது உப்பு போட்டு சுருட்டி கொள்ளவும்.
- வானலியில் நாலு தேக்கரண்டி எண்ணை விட்டு மிள்காய் தூள்,இஞ்சி பூண்டு,தந்தூரி மசாலா, சோம்பு தூள் போட்டு பிற்கு இறாலை போட்டு நல்ல பிறட்டி மூடி போட்டு ஐந்து நிமிடம் விடவும்.
- பிறகு தீயை அதிக படுத்தி உப்பு சேர்த்து அதில் நிற்கும் தண்ணீர் சுருண்டு ரெட் கலரில் முருக ஆரம்பிக்கும் போது மீதி இரண்டு தேக்கரன்டி எண்ணை சேர்த்து கிளறி கடைசீயில் மீதி அரை லெமென் ஜூஸ் பிழிந்து கொத்து மல்லி கருவேப்பிலை தூவி இரக்கவும்.
-
-
-
-
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
ஐந்து நபர்களுக்கு |
20 நிமிடம் |
10 நிமிடம் |