சேப்பங்கிழங்கு இறால் ஸ்பைசி மசாலா

தேதி: April 5, 2008

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு - கால் கிலோ
இறால் - கால் கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் துள் - கால் தேக்கரண்டி
உப்பு துள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - மூன்று டேபிள் ஸ்பூன்


 

முதலில் சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நான்காக வெட்டி வைக்கவும்.
இறாலை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடித்து பெரிய இறாலாக இருந்தால் சிறியதாக வெட்டி கொள்ளவும்.
சட்டியை காய வைத்து அதில் எண்ணெயை ஊற்றி பட்டை, போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கலர் மாறியதும் கொத்தமல்லி பச்சை மிளகாய், தக்காளியையும் சேர்த்து கிளறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு வதக்கி பிறகு இறாலை போட்டு நன்கு கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.
எல்லாம் வெந்து நல்ல மசாலா கூட்டனதும் கடைசியில் சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படி இருக்கீங்க மேடம் இந்த சேப்பங்கிழங்கு செய்யலாம்னு பார்த்து எடுத்தேன். ஆனால் இதில் எங்கே மேடம் சேப்பங்கிழங்கு சேர்த்து இருக்கீங்க? இறால் சேர்க்காமல் செய்யலாம்னு பார்த்தா சேப்பங்கிழங்கு அந்த தூள் எல்லாம் சேர்த்த பிறகு வேக வைத்த கிழங்கை சேர்க்கலாமா மேடம்.

நந்தினி இறாலை போட்டதும் சேப்பங்கிழங்கை சேர்த்து நல்ல பிரட்ட வேன்டும் பிரகு ரெஸிபியி;ல் மாற்றி கிறேன்.
இப்ப டைம் இல்லை.
நன்றி டவறை சொன்னதற்கு
ஜலீலா

Jaleelakamal