www.arusuvai.com
சேப்பங்கிழங்கு இறால் ஸ்பைசி மசாலா
தேவையானப் பொருட்கள்
- சேப்பங்கிழங்கு - கால் கிலோ
- இறால் - கால் கிலோ
- வெங்காயம் - இருநூரு கிராம்
- தக்காளி - ஒன்று
- பச்ச மிளகாய் - இரண்டு
- மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
- மஞ்சள் துள் - கால் தேகரண்டி
- உப்பு துள் - இரண்டு தேக்கரண்டி
- எண்ணை - நாலு தேக்கரண்டி
- பட்டை - ஒன்று
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
- கொத்து மல்லி தழை - முன்று டேபுள் ஸ்பூன்
செய்முறை
- முதலில் சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நான்காக வெட்டி வைகவும்.
- இறாலை சுத்த செய்து கழுவி த்ண்ணீரை வடித்து பெரிய இறாலாக இருந்தால் சிறியதாக வெடி கொள்ளவும்.
- சட்டியை காய வைத்து அதில் எண்ணை ஊற்றி பட்டை, போட்டு வெடிக்கவிட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வதக்க வேன்டும்.
- பிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டுவதக்கி கலர் மாறியதும் கொத்து மல்லி பச்ச மிளகாய், தக்காளியையும் சேர்த்து கிளறி, மிள்காய் தூள் மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு வதக்கி பிற்கு இறாலை போட்டு நன்கு கிளறி ஐந்து நிம்டிஅம் சிம்மில் வைக்கவேண்டும்.
- எல்லாம் வெந்து நல்ல மசாலா கூட்டனதும் கடைசியில் சிறிது கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
நான்கு நபர்களுக்கு |
25 நிமிடம் |
20 நிமிடம் |