வியர்கூரு

என் குழந்தைக்கு ( வயது: 6 மாதம்) வியர்கூரு உள்ளது, NYCIL Use பண்ணலாமா.

நல்லா நகைசுவையா பேசுறிங்க எல்லாரும்.நான் சென்னையில் உள்ள அலுவலகதில் பணிபுறிகிறேன்.தோழிகள் என் வயிறு பற்றி கின்டல் பண்ணுகிறார்கள்.அதான் கேட்டேன்.

With Love

வயிறு குறைய கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகனும் சாந்தனா(இது பொய்ப் பேருதானே?:-))
ஆனால் கொஞ்சம் சுலபமா குறையனும்னா ஒரு ஐடியா தினம் 30 நிமிடமாவது வாக்கிங் போயே ஆகனும் இல்லன்னா வயிறை நீங்க தனியா ட்ராலியில் தள்ளிட்டு போக வேண்டிய நிலமை வந்துடும்.
மர்ழியா இப்படியே இது என்னோடது தானே நானே வெச்சுக்கறேன்னு இருந்தேன்னு வை நீ எங்கயோ போயிருவ;-))
தினம் 30 நிமிடம் வயிறை உள்ளிழுத்து(மூச்சை அல்ல) பிடித்து நடங்கள்..வயிறு ரொம்ப வேகமாக குறையும்..என் அம்மா தான் முதலில் இதை சொல்லித் தந்தது கிண்டல் பன்னினேன் ஆனால் எனக்கு பலன் தந்தது இது தான்னு வாக்கிங் போக தொடங்கி 1 மாதத்திலேயே புரிந்து கொண்டேன்
வயிறு குறையவென்றே கிடைக்கும் பெல்ட் இருக்கே அதை கட்டிக் கொண்டு நடந்தாலும் குறையும் ஆனால் அது கொஞ்சம் நச்சு.
கட்டினால் மண்டை காயும் அது நடக்க நடக்க நென்சுக்கு ஏறிடும் பின்ன ரோட்டில் நின்று தான் அவிழ்த்து கட்டனும்.
இல்லைன்னா இன்னும் கொஞ்சம் கஷ்டமான ஆனால் ஜாலியான எக்செர்சைஸ்
நல்ல பெட்டில் படுத்து உங்க பிள்ளையை உங்க முட்டியில் வைத்து முதிகைத் தூக்காமல் முட்டியை பிள்ளையோடு சேர்த்து வயிறு வரை மடக்கி மடக்கி விளையாடுங்கள்..பிள்ளையும் சந்தோஷப்படும் வயிறும் நல்ல குறையும்.கேட்டா ஐ ஜாலி விளையாட்டுன்னு தோனுதா செஞ்சு பாருங்க வயிறு இறுகுவதை 5 நிமிடத்தில் உணர்வீர்கள்

சாந்தனா இல்லை, சந்தனா. இது என் அம்மாவின் பெயர்(நல்லாருக்கா).அம்மாவின் முழு பெயர் சந்தனா மேரி.நல்லாருக்குனு நான் username-a use பண்ணிட்டேன்.என்னுடைய பெயர் ஜோன்.

With Love

உங்க அம்மாவின் பெயர் நன்றாக உள்ளது. உங்க பாப்பா எப்படி இருக்கின்றாள்? நான் மனோ/சென்னை. என் பாப்பாவின் பெயர் ஹரிணி. உஙகளை சந்தித்ததில் மகிழ்ச்சி.

மேலும் சில பதிவுகள்