உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

காய்கறி கஞ்சி

 

இந்த காய்கறி கஞ்சி எங்கள் ஊரில் நோன்பு சமயங்களில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

  • கேரட் - 100 கிராம்
  • பீன்ஸ் - 50 கிராம்
  • உருளைகிழங்கு - 100 கிராம்
  • தக்காளி - 2
  • அரிசி - 1 கப்
  • சிறு பருப்பு - 1/2 கப்
  • பச்சைமிளகாய் - 2
  • மசாலாதூள் - காரத்திற்க்கு ஏற்ப
  • உப்பு - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - சிறிது
  • கருவேப்பிலை - சிறிது
  • இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரணடி
  • கருவா - ஒரு துண்டு
  • ஏலம் - 2
  • கிராம்பு - 2
  • நெய் - தாளிப்புக்கு
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது (தாளிப்புக்கு)
  • தேங்காய் பால் - 1/4 கப்

செய்முறை

  • முதலில் காய்கறிகளை தோல் நீக்கிவிட்டு நறுக்கிக்கொள்ளவும். பின் குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தக்காளியையும் நறுக்க சேர்க்கவும். அரிசி,பருப்பையும் கழுவி சேர்க்கவும்.
  • பின் அதில் மஞ்சள் தூள்,மசாலாதூள்,இரண்டாக கீறிய பச்சைமிளகாய்,உப்பு இவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  • பின் குக்கரில் 3 விசில் வந்ததும் குறைந்த தீயில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும். ரெம்பவும் கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து நெய் ஊற்றி, கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து,பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி காய்கறி கலவையை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி தேவையானால் சிறிது உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

வழங்கியவர்

செய்யதுகதீஜா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

6 நபர்கள் 10 நிமிடம் 30 நிமிடம்
random food image


comments
கருவா என்றால்?
ஏப்ரல் 7, 2008 - 3:45pm - வழங்கியவர் SubaM

ஹலோ கதீஜா,
நலமா?கருவா என்றால் என்ன? நீங்கள் தாளிப்பதற்கு இதனை அநேக இடங்களில் உபயோகப் படுத்தியுள்ளீர்கள்.. மசாலா பொருளா? தாளிப்பு வடகமா?
Thanks,
Suba.

hi suba
ஏப்ரல் 7, 2008 - 4:12pm - வழங்கியவர் doreen

suba karuva endral karruva pattai.

Thanks Doreen
ஏப்ரல் 7, 2008 - 4:22pm - வழங்கியவர் SubaM

Thanks Doreen....

பட்டை(cinnamon sticks)தானா.. நான் ஏதோ கருவாடு சம்பந்த பட்டதோ என நினைத்து விட்டேன்.. ஹிஹி..

hi subaM
ஏப்ரல் 8, 2008 - 5:08am - வழங்கியவர் seyedkatheeja

பட்டை என்றால்(cinnamon sticks) தான். நீங்கள் நினைத்தது போல கருவாடு சம்பந்தப்பட்டுலாம் கிடையாதுமா.

அன்புடன் கதீஜா.