www.arusuvai.com
காய்கறி கஞ்சி
இந்த காய்கறி கஞ்சி எங்கள் ஊரில் நோன்பு சமயங்களில் செய்வார்கள் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
- கேரட் - 100 கிராம்
- பீன்ஸ் - 50 கிராம்
- உருளைகிழங்கு - 100 கிராம்
- தக்காளி - 2
- அரிசி - 1 கப்
- சிறு பருப்பு - 1/2 கப்
- பச்சைமிளகாய் - 2
- மசாலாதூள் - காரத்திற்க்கு ஏற்ப
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - சிறிது
- கருவேப்பிலை - சிறிது
- இஞ்சி,பூண்டு விழுது - 1 தேக்கரணடி
- கருவா - ஒரு துண்டு
- ஏலம் - 2
- கிராம்பு - 2
- நெய் - தாளிப்புக்கு
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது (தாளிப்புக்கு)
- தேங்காய் பால் - 1/4 கப்
செய்முறை
-
- முதலில் காய்கறிகளை தோல் நீக்கிவிட்டு நறுக்கிக்கொள்ளவும். பின் குக்கரில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தக்காளியையும் நறுக்க சேர்க்கவும். அரிசி,பருப்பையும் கழுவி சேர்க்கவும்.
- பின் அதில் மஞ்சள் தூள்,மசாலாதூள்,இரண்டாக கீறிய பச்சைமிளகாய்,உப்பு இவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
-
- பின் குக்கரில் 3 விசில் வந்ததும் குறைந்த தீயில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும். ரெம்பவும் கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
-
- பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து நெய் ஊற்றி, கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து,பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி காய்கறி கலவையை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி தேவையானால் சிறிது உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
-
-
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
6 நபர்கள் |
10 நிமிடம் |
30 நிமிடம் |