செய்முறை
- முதலில் கறியை சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். பின் கறியில் 1 தேக்கரண்டி இஞ்சி, 1 தேக்கரண்டி பூண்டு, 2 தேக்கரண்டி மசாலாதூள், மஞ்சள் தூள் சிறிது,உப்பு இவற்றை சேர்த்து குக்கரில் நன்கு வேகவைத்துக்கொள்ளவும். தண்ணீரே இல்லாமல் நன்கு வரட்டிக்கொள்ளவும்.
- பின் கேரட்,உருளைகிழங்கை தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும். பின் குக்கரில் காய்கறிகளை சேர்த்து தக்காளியை இரண்டாக நறுக்கி போடவும்.பின் அரிசி,பருப்பையும் கழுவி சேர்த்து அத்துடன் மசாலாதூள் 1/2 தேக்கரண்டி,மஞ்சள்தூள்,உப்பு, இவற்றை சேர்த்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும். காய்கறி வெந்ததும் வரட்டிய கறியையும் சேர்த்து ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.
- பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு, போட்டு தாளித்து,பின் இஞ்சி,பூண்டு விழுது மீதி இருப்பதையும் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து வைத்த கலவையை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும் தேவையானால் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
12 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -