புதினா தொக்கு

தேதி: April 8, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - ஒரு கட்டு
புளி - நெல்லிக்காய் அளவு
காரத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலைகள்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி


 

முதலில் புதினாவையும் புளியையும் ஒன்றாக போட்டு அரைக்கவும்.
பின் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை போடவும்.
கடைசியில் அரைத்த விழுது காரத்தூள், உப்பு போட்டு நன்றாக சுண்ட கிளற வேண்டும்.
இது ப்ரிட்ஜில் வைத்து இருந்தால் 3 வாரம் கெடாமல் இருக்கும். சாதத்துக்கும், இட்லிக்கும் நல்லது.


நல்லெண்ணெய் விட்டால் மனமாக இருக்கும். சாதத்தில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hello viji madem,
i saw ur pudina thokku recipe... wht is meant by kaara thool? is it red chilli powder or any other powder? this is an useful recipe for me.. iam going to try this very soon and i'll send the feedback... pls clear my above said doubt...

kara thool is nothing red chilli powder. thanks