தேவையானப் பொருட்கள்
- புதினா - 1 கட்டு
- புளி - நெல்லிக்காய் அளவு
- காரதூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 5 இலைகள்
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் புதினாவையும் புளியையும் ஒன்றாக போட்டு அரைக்கவும்.
- பின் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்தவுடன் பெருங்காயம், கறிவேப்பிலை போடவும்.
- கடைசியில் அரைத்த விழுது காரத்தூள், உப்பு போட்டு நன்றாக சுண்ட கிளற வேண்டும்.
- இது ப்ரிட்ஜில் வைத்து இருந்தால் 3 வாரம் கெடாமல் இருக்கும். சாதத்துக்கும், இட்லிக்கும் நல்லது.
-
குறிப்பு
நல்லெண்ய் விட்டால் மணமாக இருக்கும். சாதத்தில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
|
|
5 நபர்களுக்கு |
20 நிமிடங்கள். |