மைக்ரோவேவ் அவன் கலாகண்ட்

தேதி: April 8, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் பவுடர் - ஒரு கப்
ரிக்கோட்டா சீஸ் - ஒரு டப்பா
நெய் - ஒரு தேக்கரண்டி
சீனி - ஒரு கப்
பாதாம் - ஒரு தேக்கரண்டி
பிஸ்தா - ஒரு தேக்கரண்டி


 

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸ் பண்ணி மைக்ரோ அவனில் 25 நிமிடங்கள் வைக்கவும்.
10 நிமிடம் கழித்து வெளியே எடுத்து வில்லைகளாக போட்டு பாதாம், பிஸ்தா, ஏலக்காய் போட்டு அலங்கரிக்கவும்.


ரிக்கோட்டா சீஸில் செய்ய கூடியதலால் மிக்க ரிச் ஆக இருக்கும். இதில் இரு வகை சீஸ் கிடைக்கும். கொழுப்பு உள்ளது/கொழுப்பு இல்லாததும் கிடைக்கும்.
மைக்ரோ அவனின் பவரை பொறுத்து 30 அல்லது 35 நிமிடம் வைக்கவும். அதற்கு மேல் வேண்டாம். இது மிகவும் எளிதில் செய்யக் கூடியது

மேலும் சில குறிப்புகள்


Comments

விஜி,
பால் பவுடர் என்றால், குடிக்கும் பால்மா பவுடரா? ரிக்கோட்டா சீஸ் என்றால் என்ன? கட்டி சீஸா? அல்லது திரவமாக இருக்குமே அதுவா? எல்லாவற்றையும் குழைத்து வைக்க வேண்டுமா? தண்ணி எதுவும் சேர்க்காமல் குழைப்பதா? எனக்கு நிறைய சந்தேகங்கள் தயவுசெய்து, தீர்த்து வையுங்கள். செய்வதற்கு இலகுவாக இருக்கிறது அதுதான் கேட்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பால் பவுடர் என்பது கொஞ்ஜம் solids பவுடரா கிடைக்கும். குடிக்கற பவுடர் கிடையாது. U will get any grocery stores its avaliable in the bakery section. ரிக்கோட்டா சீஸ் என்பது கொஞ்சம் தயிர் மாதிரி இருக்கும் ரொம்ப கெட்டியாக இருக்காது தண்னி எதுவும் சேர்க்கவேண்டாம். இந்த ரீக்கோட்டா சீஸே கொஞ்சம் தண்ணிமாதிரி தான் இருக்கும்.ரொம்ப ஸிம்பிள்.

ஹாய் விஜி,
நான் ஒரு சீஸ் பிரியை. இந்த குறிப்பு பார்த்த உடனேயே சீஸ் வாங்கி விட்டேன். நீங்க அதிராக்கு சொன்னமாதிரி நானும் பால்பவுடர் என்டு Baking section இல் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அதனால் கரைத்து குடிக்கும் பால்பவுடரே(NIDO Brand) போட்டேன். கலாகண்ட் மிகவும் சுவையாக வந்தது. எனக்கும் 25 நிமிடங்கள்தான் எடுத்தது. பாதாம், கஜு(முந்திரி) நெய்யில் வறுத்துப் போட்டேன். அத்தோடு எடுப்பதற்கு 2 நிமிடங்களுக்கு முன் சிறிது வனிலா சேர்த்தும் கிளறி விட்டேன்.

சுவையும் மணமும் மிகவும் நல்லா இருந்தது. பக்கத்து வீட்டினருக்கும் மிகவும் பிடித்திருந்தது. நன்றியும் வாழ்த்துக்களும்.
-நர்மதா:)

PS: விஜி, இதன் செய்முறை விளக்கப்படங்கள் எடுத்துள்ளேன். அட்மின் எங்கேயோ ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார், யாருடைய குறிப்பு என்றாலும் செய்யும் போது படம் எடுத்து அனுப்பலாம் என்று. அதனால் அவருக்கு அனுப்புகிறேன்.

Nila2006 நன்றி. நிங்க USA வில் இருக்கிங்கன்ன stom&Stop,market basket bakery things section இல் கண்டிப்பா கிடைக்கும். அடுத்த தடவை ட்ரை பண்னுங்க. நன்றி படம் பிடித்து அனுப்பவதற்க்கு. ரொம்ப ஸிம்பிள். இதை வைத்து நான் உங்களுக்கு வேற ரெசிப்பி இருக்கு அனுப்பறேன்.

என்னோட ரெசிப்பிஸ் முக்கால்வாசி semi homemade thaan.என்னோட ப்ரென்ஸ் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். கெட் டு கெதர் என்றால் என்னை இதை தான் பண்ண சொல்வார்கள்.
உங்களுக்கு நான் ஸுப்ப்ர் ரெசிப்பி அடுத்த வாரம் கண்டிப்பா தரேன். எனக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லாதனால் பண்ன முடியாமல் இருக்கேன்.
படம் எடுத்து அதை அனுப்பலாம் என்றுள்ளேன்.
நன்றி

அருமையான மைக்ரோவேவ் கலாக்கண்ட்...
இது ஒரு லாங் பெண்டிங்க் குறிப்பு.. ரொம்ப நல்லா வந்தது. நாளைக்கு டின்னருக்கு போகும் முன் எவ்வளவு இருக்கும்ன்னு தெரியலை. ரொம்ப நன்றி விஜி.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா ரொம்ப நன்றி. எஞ்ஞாய் தாங்க்ஸ்கிவ்ங் டே.
சந்தோஷமா இருக்கு. நானும் அடிக்டி வீட்டில் செய்வேன். உடனேயே காலியாகிடும். மெசேஜ் பார்த்தேன்.நான் வெளியில் போய் இருந்தேன். மாலை தான் வந்தேன். பிறகு பார்க்கலாம்.நன்றி.........................................இலா.

விஜி!!! நானும் உங்களுக்கு மறுபடியும் போடனும் என்று நினைத்தேன். இன்று ஜிம்மில் கொண்டு போய் கொடுத்தேன் நல்லா ஆப் எக்ஸ்ப்ரெஸ்ஸும் ஸ்டெப் கிளாசும் முடிந்ததும் கொடுத்தேன் எல்லாரும் ரொம்ப நல்லா இருந்ததுன்னு சொன்னாங்க.. ஜிம் மிஸ் வேற என் பிள்ளைகளுக்கு கொடுக்கறேன்னு எடுத்துகிட்டா... அவரும் ஒரு நல்ல கட்டு.. சொன்ன மாதிரி எல்லாம் காலி.. நாளை கடை வேற இருக்காது...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

விஜி நேத்து இதனை ஃபேட் ஃப்ரீ ரிக்கோட்டா சீஸ் வைத்து செய்தேன்.. எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிட்டு தீர்த்தார்கள்.

போன வாரம் ஜிம் மிஸ் தனியா சொன்னா.. உன்னோட டெசெர்ட் ரொம்ப பிடிச்சது எனக்குன்னு...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

kaivasam ricotta cheese irukku. athan sariyana alavu sollung pls. my daughters fav.

விஜி கொடுத்துள்ள அளவு சரியாக இருக்கு. சின்ன டப்பா என்றால் 1/2 கப் பால் பவுடர் சக்கரை தேவையான அளவு போடுங்க... நல்லா வரும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இந்த கலாகண்ட் ரெஸிப்பி ரொம்ப சூப்பரா இருக்கே?! ஆனால், எனக்கு இன்னும் சின்னதா குழப்பமா இருக்கு... அளவுகளில்.

பால் பவிடர் - 1 கப் (8 oz)
ரிக்கோட்டா சீஸ் - 1/2 கப் (4 oz) -ஆ?!! கொஞ்சம் சொல்லுங்க.
சர்க்கரை - 1 கப் (8 oz) அல்லது நம்ம டேஸ்ட்டுக்கு தகுந்தமாதிரியா?!

ட்ரை மில்க் பவுடர், ரெடியூஸ்டு ஃபேட் ரிக்கோட்டா சீஸ் எல்லாம் வாங்கி வந்துவிட்டேன். பதில் கிடைத்ததும் செய்து பார்த்துவிடவேண்டியதுதான்.

பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இலா,

நான் நேற்றும், அதற்கு முந்தின தினமும் உங்களுக்கு ஒரு பதிவு போட்டேன். பதிலுக்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு தெரியும், நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள் என்று, இல்லாவிடில் இன்னேரம் எனக்கு பதில் பதிவு போட்டு இருப்பீர்களே?!

அந்த இன்னொரு பதிவையும் இங்கு தருகிறேன், நேரம் கிடைக்கும்போது பதில் தாருங்கள், இலா. தேங்ஸ்!.
http://www.arusuvai.com/tamil/forum/no/4620?from=60&comments_per_page=30

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

எனக்கு அவுன்ஸ் கணக்கு தெரியலை. ஆனா ரெகுலரா வாங்குற தயிர் டப்பா என்றால் ஒரு டப்பா அது தான் முதல் முறை செய்தேன் . விஜியின் அளவு சரி. அதிலே சிறிய டப்பா என்றால் 1/2 மெஷ்ரிங் கப் பால் பவுடர். சும்மா கவலை படாமா செய்யுங்க. இடையில் வேனுமின்னா கலக்கி விட்டாலே தெரியும். சர்க்கரையும் உங்க டேஸ்ட் தான்.

"லட்சியங்களை துரத்தியதால் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்"

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,
நீங்க தைரியம் கொடுத்ததும், சரின்னு போட்டு செய்து பார்த்தேன். கலாக்கண்ட் சூப்பர். எங்க வீட்டில் எல்லொருக்கும் ரொம்ப பிடித்திருந்தது...தேங்ஸ் இலா!.

நான் எப்போதும் செய்யும் மைக்ரோவேவ் மில்க் பேடா-வோட சேர்த்து இனி இரண்டு ஈஸி, இன்ஸென்ட் ஸ்வீட்ஸ் ஆச்சு! குறிப்புக்கு ரொம்ப நன்றி விஜி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

:)) Happy New Year!!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ விஜிடிவிஎம்,
நான் இதை செய்து பார்க்க ஆசைப்பட்டு ரிகோட்ட சீஸ் தேடினேன்.கிடைக்க வில்லை.
பதிலாக cottage சீஸ் பயன்படுத்தலாமா ?
மில்க் பவுடர் everyday பயன்படுத்தலாமா?

நான் இந்த அளவு பயன்படுத்தலாமா
-பால் பவுடர் - 1 கப்
-சீஸ் - 1 கப்
-சர்க்கரை - 1 கப்.
இது சரியான அளவா?

ஹாய் எப்படி இருக்கிங்க? வெரி ஸாரி நான் இப்ப தான் பார்த்தேன்.

நான் காட்டேஜ் சீஸ்ஸில் செய்ததில்லை.
நிங்க எந்த நாட்டில் இருக்கிங்க தெரியல்லை. அமெரிகாவில் என்றால் எல்லா க்ரோசரி கடைகளிலும் மில்க் செக்ஷன் அல்லது சீஸ் செக்‌ஷனில் கிடைக்கும். ஹோல்சேல் பிஜேஸ், கோஸ்கோ, வால்மார்ட், டார்கெட் போன்ற கடைகளிலும் கிடைக்கும்.

எவரிடே மில்க் ட்ரை மில்க் பௌடர் என்று போட்டு இருந்தால் யூஸ் செய்யலாம்.
என் தோழி செய்து நான் கேட்டிருக்கேன். காட்டேஜ் சிஸ்ஸில்.

அதன் ரெசிப்பி உங்களுக்காக.
இதில் உள்ள அளவுகள் சரியே.
வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவசியம் கேளுங்கள்.

பன்னிர் சேர்ப்பதனால்
க்ரிம் சேர்க்கவேண்டும்.
மற்றபடி எல்லாம் இதே போல் தான்.
செய்துவிட்டு சொல்லுங்க.

ரொம்ப நன்றி..
இலா எனக்காக நிங்க குடுத்த பின்னுட்டம் மிக்க மகிழ்ச்சி & நன்றி.

ஸ்ரீ ஸாரிப்ப அப்ப என்னால வர இயலவில்லை. கொஞ்சம் கை வலி இருந்த்து என்னால் கம்யூட்டர் பக்கம் நான் வர இயலமால் போனது.
ரொம்ப சந்தோஷமா இருக்கு நிங்க செய்து நல்ல வந்தது என்று சொன்ன போது. அளவுகள் எல்லாம் சரியே. நான் இது பலமுறை செய்தபின் தான் இங்கு குடுத்திருக்கேன். எனக்கு ரொம்ப பிடித்த இனிப்பும் கூட.
நன்றி.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. சுஸ்ரீ(susri 27) அவர்கள் தயாரித்த மைக்ரோவேவ் கலாகண்ட்டின் படம்

<img src="files/pictures/aa323.jpg" alt="picture" />

விஜி, எப்படி இருக்கீங்க. இதை நான் தீபாவளிக்கு செய்தது. இப்போதான் பின்னூட்டம் குடுக்கிறேன். சூப்பராக இருந்தது. செய்வதற்கும் ரொம்ப ஈசியா இருந்தது. நன்றி உங்களுக்கு.