கத்தரிக்காய் பொரிக்கறி |
அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார். இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எந்த வைபவமானாலும் இந்தக் கறி முதலிடத்தில் இருக்கும்.
|
|
|
தேவையானப் பொருட்கள்
- கத்தரிக்காய் - 2 பெரியது (450 - 500 g)
- வெங்காயம் - 1 பெரியது
- பச்சை மிளகாய் - 3
- உள்ளி - 4 பல்லு
- உருண்டைக் கடலை - 1/2 டம்ளர்
- பழப்புளி - ஒரு எலுமிச்சைப்பழம் அளவு
- பால் - 1/2 டம்ளர் (தேங்காய் பால் எனில் முதல் வடி, பசும்பால் எனில் whole milk)
- கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
- காரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 400 மில்லி
|
தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக்கொள்ளவும். கடலையை முதல்நாள் இரவே ஊற வைத்துவிடவும்.
|
 |
கத்தரிக்காயை சிறிய அரைவட்டத் துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து 1 தேக்கரண்டி உப்பு போட்டு அதனுள் போடவும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து வைக்கவும். உள்ளியைத் தட்டி, தோல் நீக்கி வைக்கவும்.
|
 |
கத்தரிக்காயை மெதுவாக பிழிந்தெடுத்து, பொன்னிறமாகப் பொரித்து, ஒரு பேப்பரில் போடவும். அதேபோல் ஊறிய கடலையையும் பொரித்து (ஓரளவு பொரித்தால் போதும்), ஒரு பேப்பரில் போடவும்.
|
 |
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 3 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
|
 |
கொஞ்சம் நிறம் மாறியதும், உள்ளியைப் போட்டு வதக்கவும்.
|
 |
உள்ளியும் வதங்கியதும், அடுப்பை அணைக்கவும் அல்லது பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, கறித்தூளைப் போட்டு பிரட்டவும்.
|
 |
ஒரு டம்ளம் வெந்நீரில் புளியைக் கரைத்து, 1 தேக்கரண்டி உப்பும் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அடுப்பை எரியவிடவும். (புளி முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி விட்டு நன்கு கரைத்து வடித்தெடுத்து விடவும்).
|
 |
புளித்தண்ணீர் சூடாகியதும், பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
|
 |
கொதிவந்ததும், முதலில் கடலையைச் சேர்த்து 2 நிமிடம் பிரட்டவும்.
|
 |
பின்னர் பொரித்த கத்தரிக்காயைப் போட்டுப் பிரட்டவும்.
|
 |
நன்கு கிரேவி வற்றியதும். அடுப்பால் இறக்கவும். இறக்குவதற்கு முன் கரம் மசாலா போட்டு பிரட்டவும்.
|
 |
சுவையான கத்தரிக்காய்ப் பொரிக்கறி இதோ ரெடி. பிறியாணிச் சோற்றுக்கு இது மிகவும் பொருந்தக்கூடிய கறி.
|
 |
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
28 நிமிடங்கள் 10 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
40 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
45 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 46 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -