சோப்பிலே அழகிய பூக்கூடை செய்வது எப்படி?

தேதி: April 9, 2008

5
Average: 4.9 (10 votes)

சோப்பினை கொண்டு செய்யப்படும் இந்த அழகிய பூக்கூடையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

சோப் (லக்ஸ், ரெக்ஸோனா, ராணி, etc)
பேபி ரிப்பன் - 10 மீட்டர்
குண்டூசிகள்
மணிகள் (Beads)
பூ செய்யும் கம்பி - 6 அடி
பிளாஸ்டிக் பூக்கள், இலைகள்
கத்திரிக்கோல்

 

குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும்
குண்டூசியில் மணியை கோர்த்து சோப்பின் மேற்புறமும், அடிப்புறமும் நீள்சதுரமாக வரிசையாக சொருகவும். பின்னர் சோப்பின் ஓரப்பகுதியில் சுற்றிவர படத்தில் காட்டியுள்ளவாறு சொருகவும். (இதற்கு தட்டையான சோப் பயன்படுத்த வேண்டாம். மேற்புறமும் கீழ்புறமும் வளைந்த அல்லது உருண்டையான சோப் பாவிக்கவும். பொதுவாக குளிப்பதற்கு உபயோகிக்கும் சோப் பொருத்தமாக இருக்கும்.)
பின்னர் சோப்பின் கீழ் புறத்தில் படத்தில் காட்டியுள்ளது போல ரிப்பனை குண்டூசியால் இணைக்கவும்
பின்னர் ரிப்பனை நேரே கீழே இழுத்து ஓரத்தில் குற்றிய குண்டூசியினூடாக சுற்றி மேலே எடுத்து மேற்புறமுள்ள குண்டூசியினூடாக சுற்றவும்.
படத்தில் உள்ளவாறு ரிப்பனை குண்டூசியில் சுற்றி பின்னவும்
இவ்வாறு தொடர்ந்து சுற்றிவர செய்யவும்
கீழ் சுற்று முடிந்ததும், ரிப்பனை மேலே எடுத்து சோப்பில் வைத்து குண்டூசியால் சொருகவும்.
பின்னர் கீழ் பக்கம் சுற்றியது போல மேற்பக்கம் உள்ள குண்டூசிகளையும் விளிம்பில் உள்ள குண்டூசிகளையும் இணைத்து ரிப்பனை சுற்றவும்.
சோப்பு முழுவதும் இப்படியே சுற்றிவர செய்யவும்
முழுவதும் சுற்றி முடித்தபின் ரிப்பனின் முனையை மேற்பக்கத்தில் சோப்புடன் சேர்த்து குற்றவும்.
இப்போது பூக்கூடையின் அடிப்பகுதி தயார்
பின்னர் பூச்செய்யும் கம்பியில் 2 அடி நீளமான துண்டுகள் மூன்று வெட்டி தனித்தனியே மடித்து முனைகளை இணைக்கவும். இப்போது ஆறு 1 அடி நீளமான துண்டுகள் இருப்பது போல் தெரியும்.
பின்னர் பின்னல் பின்னுவதுபோல கம்பிகளை சேர்த்து பின்னவும்.
சுற்றிய கம்பியை அரை வட்டமாக வளைத்து சோப் கூடையின் மேற்பக்கத்தில் இணைக்கவும். அழகான பூக்கூடை தயார்
பின்னர் பிளாஸ்டிக் பூக்கள், இலைகள், ரிப்பன், குருவிகள் அல்லது பைன் கோன் கொண்டு கூடையை அலங்கரிக்கவும்.
உங்கள் கற்பனை திறனுக்கேற்ப அலங்கரித்துக் கொள்ளலாம். இது செய்வதற்கு எளிதானது. பார்வைக்கு மிகவும் அழகானது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டியர் நர்மதா,
பூக்கூடை மிகவும் அழகாக இருக்கிறது. செய்வதும் எளிது என்று தான் நினைக்கிறேன். எனக்கு சில சந்தேகங்கள்.

சோப்பின் இரண்டு பக்கம்மும் குண்டூசி குத்துகிறோம். கீழ்புறம் தரையில் படிமானமாக நிற்குமா?

சைடில் குத்தும் குண்டூசிகளுடன் இணைத்து மேற்புறம் ரிப்பன் கட்டிவிட்டு கீழ்புறமும் அதே இடத்தில் தானே சுற்ற வேண்டும்,அந்தளவுக்கு குண்டூசியில் இடம் இருக்குமா?

கம்பியில் பின்னல் மாதிரி பின்ன வருமா? அந்த கம்பியை சோப்புடன் இணைப்பது எப்படி?

அன்பின் அன்னு,

வாழ்த்துக்கு நன்றி.

1. பூக்கூடை செய்து முடிந்தவுடன் அடிப்பக்கத்தை தரையில் வைத்து சிறிது அழுத்தினால் குண்டூசிகள் எல்லாம் சமனான உயரத்திற்கு வந்துவிடும். எனவே படிமானமாக இருக்கும்.

2. குண்டூசியில் இடம் இருக்கும். 01 இஞ்சி(2.5cm) குண்டூசியை பாவிக்கவும்.

3. இது பூச்செய்யும் கம்பி என்பதால் இலகுவில் வளைக்கலாம். எனவே பின்னுவது சுலபம். தலைக்கு பின்னல் போடுவது போல போடவும். பின்ன கஷ்டமாக இருந்தால் அனைத்து கம்பிகளையும் சேர்த்து முறுக்கி விடவும். பின்னர் அதை அரை வட்டமாக வளைத்து சோப்பிலே குற்றவும். கம்பி என்பதால் இலகுவில் சோப்பிலே புதையும்.

இன்னும் சந்தேகம் இருந்தால் கேட்கவும். :)

-நர்மதா :)

ரொம்ப அழகா இருகுது.உங்களிடம் இருந்து இன்னும் நிறைய அறிய ஆசைப்படுகிறேன்.கன்டிப்பாக தொடர்ந்து அனுப்பவும்.நிங்கள் class எடுகிறிகளா?

hhijk

ரொம்ப அழகா இருகுது.உங்களிடம் இருந்து இன்னும் நிறைய அறிய ஆசைப்படுகிறேன்.கன்டிப்பாக தொடர்ந்து அனுப்பவும்.நிங்கள் class எடுகிறிகளா?

hhijk

அன்பின் Fazeela, பாராட்டியமைக்கு நன்றி. எனது மேலும் சில குறிப்புக்கள் சில நீங்களும் செய்யலாம் பகுதியில் இருக்கின்றன. மற்றும் சில கைவினைப் பொருட்கள் குறிப்புக்கள் அட்மினுக்கு அனுப்பியுள்ளேன். புது சைட் தொடங்கியதும் வெளியிடுவார். நான் class எதுவும் எடுப்பதில்லை, போவதுமில்லை :) நினைத்ததை செய்வேன் அல்லது எங்காவது பார்த்து பிடித்திருந்தால் செய்து பார்ப்பேன்.
-நர்மதா :)

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta