குறிஞ்சா இலை சுண்டல் (வறை)

தேதி: April 10, 2008

பரிமாறும் அளவு: 3- 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குறிஞ்சா இலை - ஒரு கட்டு (250-300 கிராம்)
(கட்டு கட்டாகத்தான் கடைகளில் கிடைக்கும்)
தேங்காய்ப் பூ - 3 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
செத்தல் மிளகாய் - 3
சின்ன வெங்காயம் சிறிதாக அரிந்தது - 2 மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

குறிஞ்சா இலையைக் கழுவக்கூடாது. கழுவினால் கைப்பு அதிகமாகும். அதனால் ஒரு ஈரத் துணியால் துடைக்கவும். பின் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அப்படியே உருட்டி எடுத்து, தலை முடிபோல் மெல்லியதாக அரியவும்.
இதனுள் தேங்காய்ப்பூ, உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, செத்தலை 2/3 ஆக நறுக்கிப் போட்டு, வெங்காயமும் சேர்த்து தாளிக்கவும். வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
பின் அதனுள் இந்த, பிரட்டியுள்ள இலையை கொட்டி ஒரு நிமிடம் பிரட்டி உடனேயே இறக்கவும். அதிகம் வதங்கத் தேவையில்லை.


இந்த குறிஞ்சா இலை நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்த ஒரு கை மருந்து. மிளகாய் போடாமல் செய்து குழந்தைகளுக்கு, சோறுடன் ஒரு பிடி பிசைந்து ஊட்டினாலே, வயிற்றிலுள்ள பூச்சி அழிந்துவிடும்.
முட்டையை விரும்பாதவர்கள் சேர்க்காமல் விடலாம். அல்லது முள் நீக்கிய மீன் ஒரு துண்டை அவித்து, பின் முட்டைக்குப் பதில் சேர்க்கலாம். தனி சைவமாகவும் சுண்டல் செய்யலாம். முட்டை சேர்ப்பது, இந்த இலையிலுள்ள கைப்புத் தன்மையைக் குறைக்கவே. உப்பு கூடினாலும், இலையின் கைப்பு அதிகமாகும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

குறிஞ்சா இலை, செத்தல் மிளகாய் என்பது என்ன?

ஜெயா.

அன்பு ஜெயா,

குறிஞ்சா இலை - எனக்கும் தெரியலை.

செத்தல் மிளகாய் - சிவப்பு மிளகாய்/மிளகாய் வற்றல்.

கொஞ்சும் இலங்கைத் தமிழில் மிளகாய் வற்றலை இப்படி சொல்வாங்க.

ஹும் - அதிராவின் குறிப்பைப் பார்த்ததும், அவர் எங்கே எங்கே என்று மனம் தேடுது.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப நன்றி. சீதா.
அன்புடன்
ஜெயா

துளிர் இலைகள் சுத்தமாகவும் கசப்புக் குறைவாகவும் இருக்கும். இலையை அரியுமுன்பு இலைக்கு நோகாமல் நடுத்தண்டினை உருவிவிட்டாலும் கசப்புக் குறையும். இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை இது.

‍- இமா க்றிஸ்

இமா!!
உங்கள் உபயோகமான தகவலுக்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எனக்கு மிகப்பிடித்த உணவு. அடிக்கடி சமைப்பதற்காகவே வீட்டில்
குறிஞ்சா வளர்த்திருந்தேன்.

செபா.

பாபு அண்ணா குறிஞ்சா இலை என்பது என்ன? படத்துடன் விலக்குங்கள் . please.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அதிரா குறிஞ்சா இலை என்பது என்ன? . உங்கல்லுடைய டிப்ஸ் நல்லா இருக்குப்பா. நீங்க பழமொழி செல்லுரதுல கலக்குரிங்க. சமையல்ல கலக்குரிங்க. நான் உங்க ரசிகை ஆயிட்டேன். உங்கல்லுடைய சமையல் குறிப்பு நல்லா இருக்கு.
நான் செய்து பார்த்து செல்லரேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபாதாமு,
குறிஞ்சா என்பது ஒருவகை இலை. கொடியில் இருந்துகிடைக்கும். கிட்டத்தட்ட வெற்றிலை போலவே இருக்கும். ஆனால் வெற்றிலையைவிட கொஞ்சம் சிறிது. இதிலும் இருவகை உள்ளது, பெருங் குறிஞ்சா, சிறுகுறிஞ்சா. ஊரில் எங்கள் வீட்டில் இருந்தது. இங்கே எனக்குகிடைப்பதில்லை. எப்போதாவது தமிழ்க்கடை கிடைத்தால் வாங்காமல் விடமாட்டேன். இதன் ஆங்கிலப் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் இங்கே தேடிப்பார்க்கலாம் படத்தை.

செபா, கயர்ப்பு உணவை விரும்புபவர்களுக்கு இது பிடிக்கும். எனக்கும் இது,பாகற்காய் எல்லாம் பிடிக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளிகா ஒரு குறிப்பில் "அதிரா சொன்னது போல் பாத்திரத்தில் தண்ணீரும்,குட்டி பாத்திரங்களும் வைத்து குழந்தைக்கு சாதம் ஊட்டினேன்" என்று சொல்லி உள்ளார்கள்.அது என்ன பதிவு என்று சொல்ல முடியுமா. நான் தேடி பார்தேன்.என்னால் கண்டு பிடிக்க முடியவில்ல்லை. இது என் குழந்தைக்கு எப்படி விளையாட்டு காண்பித்துக் கொண்டு சாதம் சாப்பிட வைப்பது என்பதை கற்றுக் கொள்ள எனக்கு உதவும். Please help.

வடிவு பாஸ்கர்!!!
அதில் புதுசா பெரிசா எதுவுமில்லை, நிறைய அரட்டையோடு இடையிடையே நல்ல விஷயங்களும் கதைத்தோம்:), அதனால் நீங்கள் கேட்டதைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே பேஸ்ட் செய்கிறேன்... முயற்சித்துப் பாருங்கள்...

/////////////////////////////
தளிகா, இன்னுமொன்று
மார்ச் 31, 2008 - 4:54am - வழங்கியவர் அதிரா
தளிகா, இன்னுமொன்று நீங்கள் ஏதாவது அலுவலாக இருக்கும் நேரத்தில் , நிலத்தில் ஒரு கார்பெட் விரித்து அதில் ஏதாவது இரு பெரிய பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் விட்டு... 2,3 கரண்டி, தேயிலை வடி, சிறிய கப் இப்படிக் கொடுத்து மகளையும் இருத்தி விடுங்கள். அதனுடன் இருப்பார் என நினைக்கிறேன். என் மூத்தவருக்கும் இப்படித்தான் செய்வேன் 1 அல்லது 2 மணித்தியாலமாவது அந்தத் தண்ணீரை ஆத்தி ஆத்தி மினக்கெடுவார். உடுப்புதான் நனையும் பின்னர் மாற்றலாம். இடையில் கொஞ்சம் பருப்பு, அரிசி அதனுள் போட்டு விடுவேன் அவரின் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.

ஆம் கதீஜா
மார்ச் 31, 2008 - 5:05am - வழங்கியவர் அதிரா
ஆம் கதீஜா, உங்களுக்கும் உபயோகமாக இருக்கும் இப்போ நேசறி விடும் நேரமாகிறது. போகவேண்டும். வந்து சொல்கிறேன். மகனுக்கு சோறுடந்தான் சிக்கின் கொடுக்க வேண்டுமென்பதில்லை. இடையில் பின்னேர உணவாகவும் சிப்ஸ் உடன் சிக்கின் அல்லது முள் இல்லாத மீன் பொரித்துக் கொடுக்கலாமே. எனது சித்தியின் பிள்ளைகளும் இப்படித்தான். மரக்கறி மட்டுமே உண்பார்கள். அப்போ சித்தி நல்ல மீன் வாங்கி உறைப்பில்லாது கட்லட் செய்து கொடுப்பார். சாப்பிடுவார்கள். சிக்கினிலும் செய்து கொடுக்கலாம்.

ஆனால் 3 வயது தானே ஆகிறது பெரிதாக கவலை வேண்டாம். மரக்கறிதான் உடலுக்கும் மூளைக்கும் எவ்வளவோ நல்லது. அந்த விதத்திலும் நீங்கள் கொடுத்துவைத்திருக்கிறீர்கள். பிள்ளைகள் மரக்கறிதான் வேண்டாம் என்பார்கள்.

இன்னுமொன்று தீத்துகிறபோது. உணவை சிறு உருண்டைகளாக்கி... இது அப்பாக்கு.. இது அமாக்கு இப்படியே வீட்டிலுள்ள அனைவரையும் சொல்லி வையுங்கள். பின்னர் சொல்லுங்கள் அப்பாவின் உருண்டை சாப்பிடாவிட்டால் அப்பா அழுவார்... அம்மா அழுவேன் இப்படியே சொல்லி சொல்லி கொடுத்துவிடலாம். இதுவும் நான் கையாளும் ஒரு முறைதான்.

///////////////////////////////////////

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்