உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பட்டர் ஸ்கோட்ஷ் பால்ஸ்

 


தேவையானப் பொருட்கள்

  • வெண்ணை - 5 ஸ்பூன்
  • பால் - 1.5 கப்
  • சர்க்கரை - 3/4 கப்(தேவைக்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்)
  • ரவை - 1/2 கப்

செய்முறை

  • முதலில் பாலை காய்ச்சிக் கொள்ளுங்கள்.கொதித்ததும் தீயை குறைத்து அடுப்பிலேயே வைய்யுங்கள்.
  • பின் சர்க்கரையை வெறும் வானலியில் தண்ணீர் இல்லாமல் மிதமான தீயில் வறுக்க வறுக்க உருகி ,பின் தண்ணீர் போல் ஆகி பின் நிறம்
  • ப்ரவுனாக மாறும் உடனே அதிலிருந்து 5 ஸ்பூன் அளவு பாகை வேறு வானலியில் ஊற்றி வைய்யுங்கள்.(பிறகு பயன்படும்)
  • பின்பு இதில் காய்ச்சிய பாலை சூடோடு ஊற்றி வெண்ணையும் சேர்த்து கைவிடாமல் கிளறுங்கள்..
  • பால் கொதித்ததும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடாமல் கிளறிக்
  • கொண்டே சேர்க்கவும்.ரவையும் பாலும் சேர்ந்து கெட்டியாகும்.கேசரி பதத்துக்கு வந்தால் போதும்.
  • தீயை அனைத்து விட்டு லேசாக சூடாறியதும் உருட்டினால் லட்டு போல் வரும் ...எல்லவற்றையும் எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி குளிசாதனப்பெட்டியில் வைத்து 1 மணிநேரம் குளிர்ந்ததும் வெளியே எடுத்து செர்விங் பாத்திரத்தில் 4 உருண்டை வைத்து மேலே முன்னே மாற்றி வைத்த பாகை(கெட்டியாகியிருந்தால் சூடாக்கி ஊற்றவும்) ஊற்றி பரிமாறவும்.
  • பாகு ஊற்றாவிட்டாலும் சர்க்கரையில் பிரட்டினாலும் அழகாக இருக்கும்

குறிப்பு:

இதன் சுவையை எழுத்தால் விவரிக்க முடியாது அவ்வளவு அருமையாக இருக்கும்...டிவியில் இதனை புட்டிங்காக காட்டினார்கள்..நான் எளிமைக்காக பாளாக செய்து பார்த்தேன் .செய்வது மிக மிக சுலபம்

வழங்கியவர்

தளிகா


comments
Assalamu Allaikum
ஏப்ரல் 16, 2008 - 5:35pm - வழங்கியவர் jannath

அஸ்ஸலாமு அலைகும் தளிகா, எப்படி இருக்கிங்க? உங்கள் பட்டர் ஸcஒட்ச் பால்ஸ் ரெசிபி பார்த்தேன். பார்க்கும் பொதெ சாப்பிட வேண்டும் என்று ஆசை வன்து விட்டது. நம்முடைய fஇர்னி (ரவை பாயாசம்)லிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிரது. இன்சாஅல்லாஹ் நான் செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் சொல்கிறேன்.

ஹாய் ஜன்னத்
ஏப்ரல் 17, 2008 - 3:04am - வழங்கியவர் thalika

ஹாய் ஜன்னத் .செய்து பாருங்க..இது கொஞ்சம் இனிப்பு கூடுதலாக போட்டு செய்ய வேண்டும் அப்ப தான் சுவையாக இருக்கும்.
ஆமாம் கேசரி வகை தான் ஆனால் இதை டிவியில் பார்த்தால் ஆஹா நாவில் தண்ணி வரும் அவ்வளவு அழகாக ப்ரெசென்ட் பன்னியிருந்தார்
அதாவது புட்டிங்காக செய்து ப்ரு பவுளில் போட்டு குளிர்ந்ததும் தட்டில் போட்டு திருப்பினால் அழகாக நிற்கும்..அதன் மேல் கேரமெலை ஊற்றி பிறகு பாகை கம்பிப்பாகாஇ காய்ச்சி அதனை உடனே சூடோடு ஒரு பெரிய தட்டில் ஸ்பூனால் கடகட என பேனாவால் கிறுக்குவது போல் வீச சர்க்கரைப் பாகு ஒரு பொன்னால் செய்யப்பட்ட வலை போல கெட்டியானது..அதனை எடுத்து அந்த புட்டிஙின் மேல் வைத்து அலங்கரித்திருந்தார்கள்..நானும் அதனை செய்து பார்த்தேன் எழுதினால் புரியுமோ என்னவோ என்று எழுதவில்லை.
கோல்ட் டிசைன் உள்ள தட்டில் வைத்து அலங்கரித்தால் சரியாக பொன்னால் செய்யப்பட்ட ஒரு உணவு போல ஜொலிக்கிறது

நலமா தோழி
ஏப்ரல் 17, 2008 - 3:44am - வழங்கியவர் tamizhi

ஹலோ எப்படியிருக்கிங்க?

இதில் ரவையை வறுக்கவேண்டுமா? என்ன?

யாருக்காவது ஜவ்வரிசியில் பொட்டு செய்து பிள்ளைகளுக்கு விடுவார்களே அது செய்ய தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன். எப்பொழுது வரும்?

தமிழி

ஹாய் தமிழி
ஏப்ரல் 17, 2008 - 3:53am - வழங்கியவர் thalika

ஹாய் தமிழி நல்லா இருக்கேன்..இதில் ரவையை அவர்கள் வறுக்க வில்லை நானும் வறுக்கலை..நான் செய்தது புட்டிங்குக்கே என்று வருமே டின்னில் ரவை அது நல்ல சுவையாக இருக்கும் அதில் செய்தேன்..அதற்கு ஒரு பால் மணம் வரும்.அதற்கு வறுக்க தேவையில்லை..

hai thalika
ஏப்ரல் 29, 2008 - 5:24pm - வழங்கியவர் jannath

ஹலோ தளிகா இந்த வீக் என்டு butterscotes pudding செய்தேன். ரொம்ப நன்ராக இருந்தது.நன்றி. என் ஹஸ்ஸின் நண்பர்கள் விரும்பி சப்பிட்டார்கள். எப்படி செய்வது என்று ஆவலாக கேட்டார்கள். நீங்கள்சொன்னது போல புட்டிங்-காக செய்தேன். ஆனால் கடைசியில் கம்பிப்பாகு வலை சரியாக வரவில்லை. கேரமல் ஊற்றி கொடுத்தேன். நீங்கள் சொன்னதுபோலவெ சுவை ரொம்ப சூப்பராக இருந்தது. அடுத்ததாக உங்கள் முட்டை குழம்பில் கண் வைத்திருக்கிரேன் .இன்சாஅல்லாஹ் செயிது பார்த்து சொல்கிரென்.

மிக்க நன்றி ஜன்னத்
ஏப்ரல் 29, 2008 - 10:57pm - வழங்கியவர் thalika

மிக்க நன்றி ஜன்னத்..ஆமாம் சுவை அருமையாக வரும் ஆனால் கம்பி வலை முதல் முறை எனக்கு கம்பியாக வரவில்லை ..திரும்ப சூடுபடுத்தி ஊற்றினேன் வலை போல வந்தது..ஆனால் அது வெறும் அலங்காரம் தானே அது தேவையில்லை.இதனை கொஞ்சம் தளர்த்தியாக அதிகம் பட்டர் சேர்க்காமல் பால் கூட்டி பாயாசம் போல் கூட செய்யலாம்.

பட்டர் ஸ்கோட்ஷ் பால்ஸ்
மே 15, 2008 - 11:48am - வழங்கியவர் VidhyaSaravanan

காய்ச்சல் மாதிரி இருக்கு என்றீர்களே பரவாயில்லையா? தங்கள் குறிப்பிட்டுள்ள அளவின் படி அவ்வளவு பேர்களுக்கு பரிமாரலாம். ஒரு 15 பேர்களுக்கு நான் செய்ய வேண்டும். பால்ஸ்-சாக செய்யலாம் என்று உள்ளேன். முதல் நாளே செய்து ப்ரிஜ்ஜில் வைத்து மறு நாள் பரிமாறும் முன் காரமல் உற்றி தரலாமா? இல்லை உடன்னுக்குடன் பரிமாரினால் தான் சுவைக்குமா? என் பெயரை காப்பாற்றி தரும் என்று உறுதியாக நம்பி செய்கிறேன். ஒரு வேலை எனக்கு அந்த கம்பி வலை சரியாக வந்தால் பட்டர் ஸ்கோட் பால்சில் எப்படி வைத்து அலங்கரிப்பது. நேரம் கிடைக்கும் சமயம் பதில் அளிக்கவும்.

பட்டர் ஸ்கோட்ஷ் பால்ஸ்
மே 16, 2008 - 11:13am - வழங்கியவர் VidhyaSaravanan

நாளை விருந்தினர் வருகிறார்கள், இன்று இரவு செய்யலாம் என்று உள்ளேன், முடிந்தால் பதில் தாருங்கள்

ஹை வித்யா
மே 16, 2008 - 11:23am - வழங்கியவர் thalika

ஹை வித்யா
சென்ற முறை பால்ஸ் செய்து அதனை தேங்காய் துருவலில் பிரட்டியும் பரிமாறினேன்.பால்ஸ் செஞ்சபின் குளிர்ந்தபின் பரிமாறும்பொழுது கேரமெல் ஊற்றி கொடுங்கள்..அது ஊற்றாமலும் சுவையாக ஒட்டாமல் வரும்.விருந்தினர்களுக்குன்னு சொன்னப்ப எனக்கே பயம்.உடல்நிலை அவ்வளவா சரியாகலை அதனால் பொறுமையா யொசிக்க முடீல வித்யா..இது இல்லாட்டி கேரட் அல்வ செய்யுங்க..கேரமெல் ரொம்ப கரிஞ்சா கசக்கும் பாத்து

தளிகா:-)

friends help me
மே 16, 2008 - 11:26am - வழங்கியவர் thalika

காய்ச்சல் மாறி இப்ப அப்பப்ப கை கால் பெருவிரல் மற்றவிரலுக்கடியில் இழுத்துக் குதெ..மரத்துப் பொகுது.என்னப்பா நான் இப்ப செய்ரது?பயமா இருக்கு கொஞ்சம் ;-)நாளைக்கு டாக்டர்ட பொரென்..இதென்ன வம்பா போச்சு ஜுரம் இப்படி செய்யுமா?
நான் என்ன குடிக்க?ஆரஞ் ஜூஸ் குடிக்கவா?

தளிகா
மே 16, 2008 - 11:38am - வழங்கியவர் Vijitvm

உங்களுக்கு வைரல் காய்ச்சலா கூட இருக்கலாம். எதுக்கும் டாக்டர்கிட்டே போய் காட்டுங்க. நல்ல ரெஸ்ட் எடுங்க. என் குழந்தைகளுக்கும் நல்ல காய்ச்சல்.

ஹாய் ரூபி
மே 16, 2008 - 11:40am - வழங்கியவர் pradeebala

எனக்கு லண்டன் வந்த பிறகு சாதாரணமாகவே கை,காலெல்லாம் மரத்து போகும்.இந்த ஊர் குளிருக்கா என்னவென்றே தெரியல அதனால உங்களுக்கு என்னால உதவ முடியல உடம்ப பாத்துக்கங்க பயப்படாதீங்க நாளை டாக்டரிடம் கேளுங்கள் என்னவென்று.அப்பறம் உடம்பு சரியான உடன் இந்த குறிப்பை முடிந்தால் படத்துடன் போடவும்
அன்புடன் தீபா

தளிகா
மே 16, 2008 - 11:42am - வழங்கியவர் VidhyaSaravanan

ரொம்ப யோசிக்காதீங்க. எனக்கு தினம்முமே, அப்பப்ப் கை கால் விரல்கள் மரத்து போகும்.(ஆனால் இழுக்காது). பயப்படாதீங்க. குழந்தை பிறந்து இரண்டு வருடம் தானே ஆகிறது, தாய்ப் பால் தந்ததினால், கொஞ்சம் வீக்கா இருப்பீங்க. ஜூரம் என்றவுடன், இன்னும் வீக்கா இருக்கும். நல்ல சப்பாடும் இருக்காது.
நல்ல (ஒரு 8 மணி நேரம்மாவது) தூங்குங்க.

பக்கத்தில் இருந்தால் ஒரு இரண்டு நாட்களுக்கு தங்கள் குழந்தையாவது பார்த்துக் கொண்டு தங்களை ரஸ்ட் எடுக்க சொல்லலாம். டாக்டரிடம், மறக்காமல் தைராய்ட் பற்றி கேளுங்கள். மற்ற படி தங்களை என்ன சாப்பிட சொல்வது என்று தெரியவில்லை.

தண்ணீர் ஆகாரம்
மே 16, 2008 - 11:45am - வழங்கியவர் vinnie

ஆமா தளிகா இப்பெல்லாம் வைரஸ் காய்ச்சல் வந்தா ரொம்ப படுத்துது, நிறைய நாட்களுக்கு வேற இருக்காம். தண்ணீர் ஆகாரம்(கஞ்சி) சாப்பிடு. ஜூஸை ஜில்லுனு சாப்பிடாம மைக்ரோவாவில் வார்ம் பண்ணி சாப்பிடு. நிறைய தண்ணீர் குடிக்கனும். ரீமா குட்டிய அவங்க அப்பா கேரில் விட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும்.

fever
மே 16, 2008 - 12:32pm - வழங்கியவர் harsi

Hi thalika
I am new this site.Rasam sappadu nalla karaichu
kudinga.Milagu rasam vatchu kutinga.Fever nalla
aagum.

ஹலோ தளிகா
மே 16, 2008 - 1:28pm - வழங்கியவர் jannath

ஹலோ தளிகா டாக்டரிடம் போனீர்களா? இப்பொழுது பரவாயில்லையா? நீங்கள் எண்ணை இல்லாத உணவாக (இட்லி, நன்ராக வெந்து குழைந்த சோறு,ப்ரெட், பிஸ்கெட் போன்றவற்றை பாலில் தொட்டு) சாப்பிடுங்கள்.ஹர்சி சொன்னது போல நல்லா கரைச்சு ரசம் சாதம் சாப்பிடுங்கள்.தளிகா போர்வை இல்லாமல் படுத்தால் உடல் சூடு வெளியேரும்.அப்புறம் குழந்தைகளுக்கு ஒத்தி எடுப்பது போல், மேலுக்கு குளித்தால் கொஞ்சம் பிரஸ் ஆகும். நல்லா ரெஸ்டு எடுங்க. இப்பொழுது எதுவும் சாப்பிட பிடிக்காது. முடிந்த அளவு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கல். fரிட்ஜில் உள்ள ஜுஸ்களை உடனெ குடிக்காமல் சிறிது நேரம் வெளியெ வைத்து பின்னர் மைக்ரொவெவில் வார்ம் செய்து குடிக்கவும்.இன்சாஅல்லாஹ் கூடிய சீக்கிரம் உடல்நிலை சரியாகி குறிப்பு கொடுக்கவருவீர்கள்.

ஹாய் தோழீஸ்
மே 17, 2008 - 6:24am - வழங்கியவர் thalika

ஹாய் தோழீஸ் ..வந்துட்டேன்..ஹஹஹா
இப்பத்திக்கி நல்ல வியர்த்து ஊத்தி பதிவு போடறேன் இனி எப்ப கிடுகிடுன்னு நடுங்கப் போறேன்னு தெரீல.
இன்று டாக்டர்ட போனேன்..எல்லாம் சொன்னேன் ..லேசா திட்டினாங்க;-(..நல்ல உடம்பில் சூடு ஏறிவிட்டதால் தான் என்றார்....இன்னைக்கி ஒரே ஜாலியா இருக்கேன்..ஏன்னா நேத்து ராத்திரி தூங்கவே பயமா இருந்ததுப்பா..சும்ம கை கால் விரல் திரும்பிக்குது..எங்க கண் முழிச்சு பாத்தா பான்டரிபாய் போல இருப்பேனோன்னு பயந்துட்டு என் பொண்ணை யார் பாப்பான்னெல்லாம் யோசனை வந்துடுச்சு;-)
இன்னைக்கி விரல் அப்பப்ப திரும்பினாலும் உடம்பு தெம்பு வந்துடுச்சு.பிறகு வறேன் சரியா.பாய்

வெற்றி தளிகா
மே 17, 2008 - 11:56am - வழங்கியவர் VidhyaSaravanan

பட்டர் ஸ்கோட்ஷ் பால், நல்ல வந்தது. நான் தான் ஒரு முட்டாள் தனமான காரியம் செய்தேன். பாள்ஸ் ஆரியவுடன், சர்க்கரையில் பிரட்டி குளிர் சாதனப் பெட்டியி வைத்தேன். அது சிறிது நீர் கசிந்து விட்டது. நல்ல வேளையாக, ஒரு ஐந்து ஆறு தான் அப்படி செய்தேன். தாங்கள் கூறியதைப் போல் மூன்று பங்கு செய்தேன், (1-1/2 கப் ரவை), 45 பாள்ஸ் வந்தது. நன்றிப்பா. முந்திரியை வருத்து பொடித்து தூவலாம் என்று உள்ளேன்.

butter scotch balls
மே 17, 2008 - 10:47pm - வழங்கியவர் thalika

ஓஹ் நானும் அதே முட்டாள்தனமான காரியம் செய்து பார்த்தேன்..நானும் ஒரு 6 பாலுக்கு செஞ்சிருப்பேன்..ஆனால் அதுக்கு எதுவும் பிரட்ட வேனாம் இல்லமலே சுவையா தான் இருக்கும் இல்ல வித்யா...ஹேப்பி இன்று முதல் ஹேப்பீ

ஹாய் தளிகா
மே 27, 2008 - 9:19pm - வழங்கியவர் sujibalaji

ஹாய் தளிகா,
ரொம்ப நாட்களுக்கு பிறகு புதிதாக செய்தது இந்த பால்ஸ் தான். கர்ப்பமான பிறகு எதுவும் புதிதாக செய்ய வில்லை.இது மிகவும் நன்றாக இருந்தது. இது எங்களுடைய திருமண நாளுக்காக செய்தது. எங்க வீட்டுக்கு வந்து இருந்த விருந்தினர் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. ஆனாலும் நன்றாக உள்ளது என்று நிறைய சாப்பிட்டார். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. சாப்பிட்டு போய் நிறைய வாக்கிங் போய்க்கிறேன் சொன்னாரு.
என்றும் அன்புடன்.
சுஜிபாலாஜி.

hi
மே 27, 2008 - 10:18pm - வழங்கியவர் sujimoorthy456

வணக்கம். நான் இன்று தான் இணைந்து உள்ளேன்

சுஜி- பட்டர் ஸ்கோட்ச்
மே 27, 2008 - 10:25pm - வழங்கியவர் thalika

இன்று இரட்டிப்பு சந்தோஷம் வேலை முடிஞ்சதும் வந்து பார்த்த பின்னூட்டம் இரண்டு.வயதான அந்த நபருக்கு பிடித்தது என்றதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் சுஜி..டயபெடிஸ் பேஷன்ட்ஸுக்கு ஏற்ற மாதிரி செய்ய முடியுமான்னு ட்ரை பன்னிட்டு சொல்றேன் சரியா.டேக் கேர்

சுஜி,மர்ழியா.அதிராதாளிகா, ஜலிலா,ஹேமா
மே 28, 2008 - 12:29am - வழங்கியவர் asia fazeela

சுஜி உங்களை அறுசுவை அன்புடன் வரவேற்கிறது.
மர்ழியா உங்களுக்கு வெட்டு காயம் பரவாயில்லையா?
அதிரா, தாளிகா, ஜலிலா ஹேமா நல்லா இருக்கீங்களா?
ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

பஜீலா அங்க பாருங்க
மே 28, 2008 - 12:50am - வழங்கியவர் Jaleela Banu

பஜீலா தலைப்பு சுருக்கமா போடுங்க இல்லை என்றால் ஸ்பேச் விடுங்க வார்த்தைக்கு வார்த்தை அங்க பாருங்க உங்கள் தலைப்பு கோட்டை விட்டு தாண்டி அந்தரங்கத்தில் நிற்குது அந்த கோட்டு குள் வரனும் இல்லை இடைவளி விடுங்கள்.அதுவும் இல்லாமல் உங்களுக்கு பேசனும் என்றால் கீழே மன்றம் என்று இருக்கு தை கிளிக்செய்து தேவையானவர்களை விசாரிங்கள்.உடனே மறுபடிஉம் மேலே பாருங்கள் மாற்று என்று இருக்கும் அங்கு போய் அதிராவிற்கும், தளிக்காவிற்கும் இடையில் ஒரு ஸ்பேஸ் விட்டு மறுபடி பதிவு செய்யுங்கள்.

ஜலீலா

jaleela
மே 28, 2008 - 12:59am - வழங்கியவர் asia fazeela

ok ma.
ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

தமிழிக்கு ஜவ்வரிசி சாந்து
மே 28, 2008 - 1:54am - வழங்கியவர் T S JAYANTHI

தமிழி நலமா?
ஜவ்வரிசி பொட்டு கேட்டிருந்தீர்கள். இப்பதான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.
ஜவ்வரிசியை கனமான வாணலியில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து கறுக வறுக்கவும். நல்ல கறுப்பாக ஆனதும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கிளறவும். பாகு பதத்தில் வந்ததும் ஒரு கொட்டாங்கச்சியில் ஊற்றி வைக்கவும். அது நன்கு காய்ந்து விடும். குழந்தைக்கு சாந்து இடும் போது 2 சொட்டு தண்ணீர் விட்டுக் குழைத்து இடவும். குழந்தைக்கு திருஷ்டி படாமல் இருக்கும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய்
ஜூன் 7, 2008 - 10:44am - வழங்கியவர் sujimoorthy456

ஹாய் பஜிலாஅக்கா நன்றி. முள் இல்லாத மீன் வகை என்னென்ன. என் பையனுக்கு கொடுக்க தான்.

ஹாய் சுஜி
ஜூன் 9, 2008 - 8:15am - வழங்கியவர் asia fazeela

ஹாய் சுஜி,என்னை பஜிலா சொல்லுங்க.அக்கா வேன்டாம்.முள் இல்லாத மீன் கிடையாது.முள் குறைவான மீன் வாவல் ,சீலா.

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH