தேவையானப் பொருட்கள்
- வெண்ணை - 5 ஸ்பூன்
- பால் - 1.5 கப்
- சர்க்கரை - 3/4 கப்(தேவைக்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்)
- ரவை - 1/2 கப்
செய்முறை
- முதலில் பாலை காய்ச்சிக் கொள்ளுங்கள்.கொதித்ததும் தீயை குறைத்து அடுப்பிலேயே வைய்யுங்கள்.
-
- பின் சர்க்கரையை வெறும் வானலியில் தண்ணீர் இல்லாமல் மிதமான தீயில் வறுக்க வறுக்க உருகி ,பின் தண்ணீர் போல் ஆகி பின் நிறம்
- ப்ரவுனாக மாறும் உடனே அதிலிருந்து 5 ஸ்பூன் அளவு பாகை வேறு வானலியில் ஊற்றி வைய்யுங்கள்.(பிறகு பயன்படும்)
-
- பின்பு இதில் காய்ச்சிய பாலை சூடோடு ஊற்றி வெண்ணையும் சேர்த்து கைவிடாமல் கிளறுங்கள்..
-
- பால் கொதித்ததும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடாமல் கிளறிக்
- கொண்டே சேர்க்கவும்.ரவையும் பாலும் சேர்ந்து கெட்டியாகும்.கேசரி பதத்துக்கு வந்தால் போதும்.
- தீயை அனைத்து விட்டு லேசாக சூடாறியதும் உருட்டினால் லட்டு போல் வரும் ...எல்லவற்றையும் எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி குளிசாதனப்பெட்டியில் வைத்து 1 மணிநேரம் குளிர்ந்ததும் வெளியே எடுத்து செர்விங் பாத்திரத்தில் 4 உருண்டை வைத்து மேலே முன்னே மாற்றி வைத்த பாகை(கெட்டியாகியிருந்தால் சூடாக்கி ஊற்றவும்) ஊற்றி பரிமாறவும்.
-
- பாகு ஊற்றாவிட்டாலும் சர்க்கரையில் பிரட்டினாலும் அழகாக இருக்கும்
-
குறிப்பு
இதன் சுவையை எழுத்தால் விவரிக்க முடியாது அவ்வளவு அருமையாக இருக்கும்...டிவியில் இதனை புட்டிங்காக காட்டினார்கள்..நான் எளிமைக்காக பாளாக செய்து பார்த்தேன் .செய்வது மிக மிக சுலபம்