தேவையானப் பொருட்கள்
- சிக்கன் எலும்பில்லாதது - கால் கிலோ
- சின்ன வெங்காயம் - ஐந்து
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா - அரை தேக்கரண்டி
- பட்டர் + எண்ணை - இரன்டு மேசை கரண்டி
- தயிர் - இரண்டு மேசை கரண்டி
- உப்பு - தேவைக்கு
- கிரீன் பேஸ்ட் தயாரிக்க
- ---------------------
- சின்ன வெங்காயம் - ஐந்து
- பச்ச மிளகாய் - முன்று
- பாலக் கீரை - அரை கட்டு
- கொத்துமல்லி கீரை - கால் கட்டு
- புதினா - பத்து இலைகள்
|
செய்முறை
- சிக்கனை கழுவி சிறு துண்டுகலாக போட்டு தயிர் உப்பு போட்டு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- கீரை வகைகளை மண்ணில்லாமல் கழுவி வடித்து வைக்கவும்.
- கீரின் பேஸ்ட் தயாரிக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து பத்து நிமிடம் ஊறிய சிக்கன் கலவையில் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு சட்டியை காய வைத்து அதில் பட்டர் போட்டு சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல பொன் முருகலாக வதக்கி நன்கு ஊறிய சிக்கனை போட்டு ஐந்து நிமிடம் கிளறி , மூடி போட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து வெந்ததும் கடைசியில் கரம் மசாலா தூவி மேலும் இரண்டு நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவும்.
- பாலக் கிரீன் சிக்கன் ரெடி.
|
குறிப்பு:
ரொட்டி, பரோட்டா, குபூஸுக்கு ஏற்ற சைட் டிஷ்.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
|
நான்கு நபர்களுக்கு |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
17 நிமிடங்கள் 38 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -