தேவையானப் பொருட்கள்
- தனியா - 1 கப்
- உளுந்து - 2 கப்
- கடலை பருப்பு - 2 கப்
- மிளகாய் வற்றல் - 5
- பெருங்காயம் - சிறிது
செய்முறை
- வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
- அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம்.
- வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம்.
- இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம்.
- இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது.
-
குறிப்பு
எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும்.
ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும்.
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
15 நிமிடம் |
15 நிமிடம் |