பீட்ரூட் இலை சாம்பார்

தேதி: April 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அறுசுவையில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. விஜி அவர்களின் குறிப்பு இது. இவர் தமிழ் நன்கு அறிந்த மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குறிப்புகள் தொடர்ந்து அறுசுவையில் இடம்பெறும்.

 

பீட்ரூட் இலை & தண்டு - 10 அல்லது 15
பெரிய வெங்காயம் - ஒன்று
பெரிய தக்காளி - ஒன்று
வேக வைத்த துவரம் பருப்பு - ஒரு கப்
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலைகள்
பட்டை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு


 

முதலில் பீட்ரூட் இலைகளை நன்றாக கழுவி, பொடியாக அரியவும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து பின்னர் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கிய பிறகு பீட்ரூட் தண்டுகளை சேர்க்கவும்.
அத்துடன் பொடியாக அரிந்து வைத்துள்ள பீட்ரூட் இலைகளையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.
புளித்தண்ணீர் நன்கு கொதித்து வந்தவுடன், வேகவைத்த பருப்பையும் போட்டு, சாம்பார் பொடியும் போட்டு 20 நிமிடம் வேகவிட வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி இலை போட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பீட்ரூட் இலை சாம்பார் ரெடி. இதனை சாதத்திற்கு ஊற்றி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த இலையில் பொரியல் செய்யலாம். தண்டை மட்டும் சேர்த்து சாம்பார் செய்யலாம். கூட்டும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

விஜி பீட்ரூட் இலையில் இது வரை நான் சமைத்தது இல்லை. எப்படி அது நன்றாக இருக்குமா? சமைத்த பிறகு கசப்பு சுவை எதுவும் இருக்குமா?

வினி . ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். கசப்பே இருக்காது.சதாரன கிரை மாதிரியே தான் இருக்கும்.

அப்படியா நல்லது விஜி. என்றாவது சமைத்துவிட்டு பின்னூட்டம் தருகிறேன்.

விஜி, நேற்று வீட்டில் இந்த சாம்பார்தான். ரொம்ப நன்றாக இருந்தது. என் கணவருக்கும் மிகவும் பிடித்தது. நீங்கள் இந்த குறிப்பை கொடுக்கா விட்டால் எனக்கு பீட்ரூட் இலையை சமைக்கும் ஐடியாவே வந்திருக்காது. நன்றி உங்களுக்கு.

விஜி இங்கு கிடைக்கும் mustard greens கொண்டு நம் சமையல் முறையில் கூட்டு,கடைதல் ஏதாவது சமைத்து இருக்கிறீர்களா? அப்படியென்றால் அது நன்றாக இருக்குமா என்று சொல்லவும்

நன்றி வின்னி,

பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டால் நல்லது. ஆனால் யாரலேயேம் சாப்பிட முடியாது. இந்த இலையை கூட்டு செய்து சாப்பிட்டால் இன்னியும் நல்லா இருக்கும். ரத்தசுத்திக்கும் ஹிமோக்ளோபின் நிற்ய்ய கிடைக்கும் என்று நம்ம இங்குள்ள டாக்டர்கள் சொன்னாங்க. இலை மட்டுமே தனியாக கிடைக்கிறது. நான் உங்களுக்கு சொல்கிறேன். ம்ஸ்டர்ட் இலை ரெசிப்பி விரைவில்.
நன்றி.வினி

நன்றி வின்னி,

பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டால் நல்லது. ஆனால் யாரலேயேம் சாப்பிட முடியாது. இந்த இலையை கூட்டு செய்து சாப்பிட்டால் இன்னியும் நல்லா இருக்கும். ரத்தசுத்திக்கும் ஹிமோக்ளோபின் நிற்ய்ய கிடைக்கும் என்று நம்ம இங்குள்ள டாக்டர்கள் சொன்னாங்க. இலை மட்டுமே தனியாக கிடைக்கிறது. நான் உங்களுக்கு சொல்கிறேன். ம்ஸ்டர்ட் இலை ரெசிப்பி விரைவில்.தில் என்கிற இலை வைத்து சாம்பார் பண்ணியிருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும்.
நன்றி.வினி

நன்றி வின்னி,

விஜி இது வரை பீட்ரூட் இலை வாங்கியதில்லை இனி வாங்கி சமைத்து பர்க்கிறேன்.
நானும் டில் இலை சாம்பார் செய்து இருக்கிறேன் ரொம்ப நல்ல இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

விஜி நீங்க சொல்வதுபோல் பீட்ரூட்டை கஷ்டப்பட்டுத்தான் சாப்பிடனும். அதுக்கு பதில் இந்த சாம்பாரை செய்து சாப்பிடலாம். தில் லீவ்ஸை வைத்து ஒரு நாள் செய்து பார்க்கிறேன். மஸ்டர்ட் கிரீன்ஸ் கொண்டு உங்க ரெஸிப்பிய குடுங்க. நான் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

நன்றி சமைத்து பாருங்க ரொம்ப நல்லா இருக்கும். அந்த தண்டை புளிப்பு கூட்டு பண்ணுங்க . ரொம்ப ரொம்ப நன்றாக டேஸ்டியாக இருக்கும்.

நான் பீட்ரூட் இலை சாம்பாரும் கூட்டும் செய்துபார்த்தேன்.இரண்டுமே மிகவும் நன்றாக வந்தது. இங்கு நான் ஸ்பினாச் மட்டும்தான் செய்து வந்தேன். இப்போது உங்கள் உதவியால் பீட்ரூட் இலையும் சமைக்க கற்றுக்கொண்டேன். மிகவும் நன்றி.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

நன்றி இஷானி.

இந்த இலை உடம்புக்கு ரொம்ப நல்லது என்று எனக்கு டாக்டர்கள் சொன்னார்கள். நான் 2 வாரத்துக்கு ஒரு முறை சமைத்து விடுவேன். ஒரு தடவை கூட்டு, ஒரு தடவை இலை சுண்டல் செய்வேன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். ட்ரை பண்ணுங்க. நம்ம சாதா கிரை சுண்டல் பன்றா மாதிரியே தான். இங்கு பீட்ரூட் வாங்கும் போது அது இலையோடு தான் வருவதலால் க்ஷ்டமேயில்லை.

ஹாற் வின்னி, மஸ்டர்ட் கிரீன்ஸ் வைத்து கிரை சுண்டல் செய்வது போல் செய்யலாம் என்று என் தோழி சொன்னாள். செய்து பாருங்க. சாம்பாரும் செய்யலாம் என்று சொன்னாள். நான் இனிமேல் தான் வாங்க வேண்டும். சுண்டல் நன்றாக இருக்கும் என்று என் தோழி சொன்னாங்க.

ஒகே விஜி. நான் செய்து பார்க்கிறேன். எனக்காக உங்கள் தோழியிடம் கேட்டதற்கு மிக்க நன்றி.

விஜி உங்க பீட்ரூட் இலை சாம்பரும் மெஹர் சுல்தான் அவர்களின் மஷ்ரூம் சாப்ஸும் தன் இன்றைய மெனு. சூப்பரா இருந்தது. மிகவும் நன்றி.உங்க ரெய்த்தா தான் நேற்று பண்ணினேன்.

பீட்ரூட் இலை மட்டும் தனியே எங்கு கிடைக்கிறது?

நன்றி.

என் ஹஸ்க்கு கூட ரொம்ப பிடிக்கும்.மாசத்தில் ஒரு தடவை இந்த சாம்பார் எங்க வீட்டில் கண்டிப்பா இருக்கும். நான். ஒரேஒரு தடவை நான் இலை மட்டும் தனியாவே ஸ்டாப்&ஸ்டாப் ல் கிடைக்கும் வாங்கினேன். ஹோல் புட்ஸில் கூட கிடைக்கும். நான் எப்ப்வுமே பீட்ரூட் இலையோடு தான் வாங்குவேன். இங்கு தான் அந்த மாதிரியே கிடைக்கிறதால் நம்க்கு ரொம்ப சுலபம். இதிலேயே தண்டை வைத்து சுண்டல்/கூட்டு பண்னி பாருங்க ரொம்ப ஸுப்ப்ரா இருக்கும்.

நன்றி ரெய்தா எப்பிடி இருந்த்து

ஹாய் விஜி நேற்று உங்கள் பீட்ரூட் இலை சாம்பார் செய்தேன் நன்றாக வந்தது.என் தோழி ஒருமுறை பொரியல் செய் நன்றாக இருக்கும் என்று சொன்னாள்.ஆனால் இங்கு இலை கிடைப்பதில்லை.அதனால் செய்யாமல் இருந்தேன்.இந்த வருடம் பீட்ரூட் செடி வைத்தேன் அதனால் உங்கள் சாம்பார் செய்யமுடிந்தது.என்னவருக்கு ரொம்ப பிடித்திருந்தது.ரொம்ப நன்றி.இதுபோல் நிறைய குறிப்பு கொடுக்கவும்.
உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.பாருங்கள்
அன்புடன் தீபா

ஹலொ விஜி உங்கள் சாம்பார் மிகவும் ருசியானது. இன்று இரவு இட்லிக்கு செய்தென். நன்றீ. என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்.