தேவையானப் பொருட்கள்
- முட்டை - ஒன்று
- உப்பு - ஒரு சிட்டிக்கை
- மிளகு தூள் - ஒரு சிட்டிக்கை
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை சிட்டிக்கை
- தண்ணீர் - ஒரு தேக்கரண்டி
- பட்டர் (அ) நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
- முதலில் தண்ணீரில் மிளகு தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நல்ல கலக்கி கொண்டு பிறகு முட்டையை போட்டு நல்ல அடிக்கவேண்டும்.
- முட்டை ஊற்றி விட்டு கலக்கினால் திட்டு திட்டாக நிற்கும் தண்ணீரில் மசாலாவை கலக்கி விட்டு கலக்கினால் முடையின் எல்லா பகுதியிலும் மசாலாக்கள் சேரும் .
- இப்போது தோசை தவ்வாவில் பட்டர் (அ) நெய்யை போட்டு தோசை மாதிரி சுட்டு எடுத்து கொடுக்க வேண்டும்.
-
குறிப்பு
குழந்தைகளுக்கு காலை (அ) மாலை டிபனாக கொடுக்கலாம்.
அப்படியே கையில் சுருட்டி கொடுத்து சாப்பிட வைக்கலாம்.
தட்டில் சிறிய துண்டுகளா பிச்சி போட்டும் சாப்பிடவைக்கலாம்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ரொட்டியில் வைட்து சுருட்டியும் கொடுக்கலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
ஒரு குழந்தைக்கு |
2 நிமிடம் |
3 நிமிடம் |