தேதி: April 17, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கறி சமையல் செய்யும்போது இதனையும் உடன் செய்யலாம். கறிக்கு தாளிக்கும்போதே கொஞ்சம் தாளிப்பை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்..
கறிக்கு தேங்காய் பால் எடுக்கும் போதும் இதற்கும் கூடவே (முதல்)பால் எடுத்து வைக்கவும்.
சமைத்த கறியில் மேலோட்டமாக எண்ணெய் இருந்தால் அதில் கொஞ்சம் எடுத்து அதை கத்திரிக்காய் மாங்காய் சமைத்ததும் அதன் மேலே வட்டமாக்க ஊற்றி, ஸ்பூனால் ஒரு சுற்று சுற்றி விட்டால் பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும்.
சிறு பருப்பு - 1 பிடி (வறுத்துப்போட்டால் வாசனையா இருக்கும்)
கத்திரிக்காய் - 3 (வெள்ளை கத்திரிக்காய் என்றால் சுவை கூடும்)
தக்காளி - 2
மிளகாய் - 1
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் - சிறிது
மாசி - சிறிது
மாங்காய் - சிறிய துண்டு (அல்லது அடை ஊறுகாய்)












Comments
திருமதி. மர்ழியா
Your daughter is so cute. Thanks for sharing it with the arusuvai family
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
மர்ழியா
உங்க பொன்னு ரொம்ப அழகா இருக்கா!! சுத்தி போடுங்க. போட்டோவை ஷேர் பன்னதற்கு நன்றி.
ஜானகி
ஹாய் மர்ழியா,
பொன்னு அழகா இருக்கா, (அம்மா மாதிரியே!!!). குறிப்பும் அருமையாக உள்ளது.
அழகான மான்குட்டி
அன்பான மர்ழியா. இப்பொழுதுதான் தங்களுடைய குறிப்பு பார்த்தேன். உடனே செய்து பார்த்தேன்.(நேற்று தான் கத்தரிக்காயும் மாங்காயும் வாங்கினேன். மாங்காய் சும்மாவே சாப்பிட வாங்கினேன். அது இப்பொழுது உதவுகிறது.)மிகவும் அருமையாக இருந்தது.நன்றி மர்ழியா. உங்களுடைய மான்குட்டி (மகள்) மிக அழகா இருக்கிறாங்க.நன்றி அன்புடன் அம்முலு.
மர்ழியா,
மர்ழியா,
உங்கள் கத்தரிக்காய் மாங்காயை விட மகளைத்தான் அதிகம் விரும்பி பார்த்தேன்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
Maasi Yendral Yenna
Hi all
what means by Maasi, please explain.
Thank you
ஹாய் ஜயசிறி
,
மாசி என்றால் ஒருவகை மீன் கருவாடு. இதனை ஆங்கிலத்தில் maldive fish என்று அழைப்போம். சிறு துண்டுகளாக்கி போத்தல்களில் கிடைக்கும்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
ஜெயஷ்ரி
ஹாய் ஜெயஷ்ரி மாசின்னா தூனா மீன் என்பார்கள் அதில் இருந்து பண்ணுவது..ஒரு சில கடைகளில் கிடைக்கும்..அது இல்லைனாலும் பரவால்லை இந்த ரெஸிபியை பண்ணலாம்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
அனைவருக்கும் மிகவும் நன்றி
டியர் இளவீரா,
(இதுதான் உங்கள் பெயரோ?என் பொண்ணை பாராட்டியதற்க்கு நன்றி
ஜானகி,
நன்றிப்பா (நான் நினைத்துள்ள ஜானகிதானே?) நலமா?
ஒரு பதிவையும் கானோம்,என்னை,அருசுவை ஐ மறந்துட்டீங்களா?கதீஜவிடம் என் ஐடி கேட்டீங்களாம் அவ சொன்னா அப்புறம் நான் உங்களை ஏட் பண்ணினேன் நோ ரெஸ்பான்ஸ் ஏன்?
வித்யா,
நன்றிப்பா ஆமா என்னை எப்பா பார்த்தீங்க?ஆஹா குழப்புறீங்களே?பதில் தாங்கப்பா..
ஹாய் அம்முலு,
ரொம்ப நன்றிப்பா நான் கொடுத்ததும் அதை உடனே செய்து பாத்து அதே ஸ்பீடில் மின்னூட்டம் அளித்த்மைக்கு.. சரியா சொன்னீங்க மான் என்று அதேதான் இவ ஒரு இடத்தில் ஒழுங்கா உட்கார்ந்ததா சரித்திரமே இல்லை ஒருண்டுட்டே வருவா..ஹா ஹா..
அதிரா,
ஹா ஹா அதிரா அப்ப கத்திரிக்காய் மாங்காய் சரி இல்லயா?என் பொண்ணை பற்ரி சொன்னதுக்கு என் நன்றிப்பா
அனைவருக்கும் மிகவும் நன்றி என் பொண்ணை பாராட்டியமைக்கு
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
அன்பு மர்ழியா
அன்பு மர்ழியா அக்காவுக்கு உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. எவ்வளவு சீக்கிரத்தில் சுத்திப்போட முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் சுத்தி போடவும். உங்களது ஒவ்வொரு குறிப்புகளையும் படித்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays
அஸ்ஸலாமு அலைக்கும் மர்ழியா
அஸ்ஸலாமு அலைக்கும் மர்ழியா,
நலமா, உங்கள் மகள் மிகவும் அழகாக இருக்கிறாள்.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
கத்திரிக்காய் மாங்காய்
ஆஹா மர்லியா இந்த பகுதி எனக்கு இப்ப தான் ஓப்பன் ஆனது.
கத்திரிக்காய் மாங்காய் சேர்ந்தால் சுவை அமோகமாக இருக்கும்.
பந்தா பொண்ணு சூப்பர்.
ஜலீலா
Jaleelakamal
கத்ரிக்காய் மாங்காய்
அன்புள்ள மனிசாரா...மிகவும் நன்றிப்பா..
என் அனைத்து குறிப்புகளையும் பார்த்து சொன்னதுக்கு மிகவும் நன்றி.. டிரைப்பண்ணி பாருங்கள்.பின் மின்னூட்டம் தாருங்கள்
அஸ்ஸலாமுஅலைக்கும் பாத்திமா,உடம்பு இப்ப நல்லா இருக்காங்கா?வயிற்றுக்குள் பேபி என்ன சொல்லுது? பாராட்டியதுக்க நன்றிப்பா...
ஆஹா அருமை அக்கா,ஸலாம்..எப்படி இருக்கீங்க?ரொம்ப பிஸியாகிட்டீங்களா?ஆளையே காண் முடியல..உடம்பை நல்லா பார்த்துக்கங்க..ஹா ஹா என்னமா போஸ் பாருங்க அவளுக்கு?
இது இப்ப எடுத்தது..
அவ இதில் போட்டு இருப்பது நான் தைத்த டிரஸ் கொஞ்சம் கழுத்து பக்கம் வலியுது அதை மறைக்க நான் பட்ட பாடு இருக்கே..ஒரு வலியா எடிட் பண்ணிட்டேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
கழுத்து பக்கம் வடிந்தால்
மர்லியா
கழுத்து பக்கம் வடிந்தால் ஷோல்டரை தூக்கி பிடிட்து தையல் போட்டு அதில் ஒரு வெள்ளை லேசை தையுங்கள்.
ஜலீலா
Jaleelakamal
ஜலீல்லாக்கா
ஹாய் ஜலீலாக்கா லைனில்தான் இருக்கீங்களா?நான் வெலக்குமாறோடு இருக்கேன் ஹா ஹா..அதை எப்பவோ சரி பண்னிட்டேன்,,, 1st time ஆ புதிதாக போட்டதால் அப்படி ஆகிட்டு..
இதேபோல எனக்கு,என் அக்கா பொண்ணுங்களுக்கு(இரண்டு பேர்) எல்லோருக்கும் ஒரே மாதுரி தைத்தேன்..எல்லோருக்கும் ஒரே மாதுரி இருந்ததால் சந்தோசமா இருந்தது...
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மகா தோ என் பொண்ணு
மாகா என் பொண்னை கிளொஸ்சப்பில் பார்லன்னு பீல் வேனாம் தோ முறைச்சுட்டு இருக்கா பாருங்க..
உங்களுக்கு தேடும் சிரமம் தர வேணம்னு நானே எடுத்து போட்டுட்டேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஸுப்பர்
வாவ் ஸூப்ப்ரா இருக்கா. த்ருஷ்டி சுற்றி போடுங்க
ஆட்டமும் சூப்பராதான் இருக்கும்
இப்பதான் இந்த பதிவை பார்த்தேன் சூப்பரா இருக்காளா ..ஆட்டமும் சூப்பராதான் இருக்கும் தேங்ஸ்மா..ஒழுங்கா உங்க பேம்லி போட்டோவை என் மெயிலுக்கு அனுப்புங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
சிறிய சந்தேகம்
அன்புள்ள மர்ழியா அக்கா,
உங்கள் குறிப்பில் உள்ள படங்கள் அருமை. உங்கள் சுட்டி பெண் மிகவும் அழகாக இருக்கிறாள். மாசித்தூள், கறி தாளிப்பு அசைவமா? இது சேர்க்காமலும் செய்ய முடியுமா? கொஞ்சம் விவரியுங்கள்.
நன்றி,
வித்யாராஜ்
வித்யா ராஜ்
அன்பு வித்யா தங்கையே!
ரொம்ப தேங்ஸ்மா மாசிதூள் அசைவம்தான் அத்ஹு ஒரு வகை மீன் அது இல்லாமலும் செய்யலாம்..
கறி தாளிப்பு என்பது சைவ முறையில்தான் இருக்கும் கறிக்கு தாளிப்பதால்தான் அசைவமாகிறது அதாவது கறியை போடுவதால்..இதன் முறை இந்த லின்கில் இருக்கு போய் பாருங்க விபரமா இருக்கும்
http://www.arusuvai.com/tamil/node/8495
இந்த லிங்கில் என் தாளிப்பு முறை இருக்கு!
தாளிப்புனா:
வெங்காயம்,க.பிள்ளை,இஞ்சி பூண்டு,தயிர் இப்படி விடுவோம் அவ்லோதான் இதெல்லாம் சைவம்தானே?செய்து பார்த்துட்டு மின்னூட்டம் தாங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
சந்தேகம் தீர்ந்தது! மிக்க நன்றி!
அன்புள்ள மர்ழியா அக்கா,
என் சந்தேகத்திற்க்கு உடனே பதிலளித்தமைக்கு மிக்க நன்றி! எனக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே USA வந்துவிட்டேன். என்னுடயை கணவர்க்கு அசைவம் தான் பிடிக்கும். நான் சைவம் முட்டை கூட சாப்பிட மாட்டேன். முதலில் நான் சாம்பார் வைத்தாலும் ரசம் வைத்தாலும் ஒரே மாதிரி இருக்கும். இப்பொழுது தான் சமையல் கொஞ்சம் நன்றக செய்கிறேன். அசைவம் மட்டுமே சாப்பிட பிடிக்கும் என் கணவர்க்கு தினமும் வெவ்வேறு வகையான சைவ உணவுகளை (கொஞ்சம் மசாலா, கார குழம்பு, பொரித்த குழம்பு, நார்த் இந்தியன் வகைகள்) என்று செய்து கொடுத்து இப்பொழுது சைவமும் பிடிக்க ஆறம்பித்து இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டு இருந்த காம்பினேஷன் மதிய உணவுக்கு ஏற்றது. அவித்த முட்டை இருந்தால் என் கணவருக்கு போதும். அதே போல் கத்திரிக்காய் சைவ முறையில் இருந்தால் எனக்கு போதும். அதனால் தான் சந்தேகம் கேட்டேன். இந்த சனி கிழமையன்று வீட்டிற்க்கு விருந்தாளிகள் வருகிறார்கள். அவர்களும் அசைவ விரும்பிகள் தான். என் கணவர் சிக்கன் ப்ரை செய்ய போகிறார். நான் உங்களுடைய குறிப்பை செய்ய போகிறேன்.
முன்பு அவர்கள் வந்திருந்தபோது திருமதி.சுமதி திருநாவுக்கரசு அவர்களின் மிளகு குழம்பும், பொரித்த குழம்பும் செய்து அளித்தேன். எல்லோரும் பாராட்டினார்கள்.
நன்றி,
வித்யாராஜ்
வித்யா ராஜ்
டியர் வித்யா!
எல்லோருக்கும் அப்படிதான் வித்யா ஆரம்பத்தில் ஒன்னுமே தெரியாது அப்புறம் கலக்கல் வொய்ப் ஆகிடுவோம்!
உங்க ஸ்டோடி இண்ற்றஸ்ட் ஆரம்பத்தில் கஷ்டமா இருந்து இருக்குமே?சாதாரானமா அசைவ விரும்பிகளுக்கு சைவம்னா மாறுவது ரொம்ப கடினம் ஆகிற்றே?அதோட உங்களுக்கும் சமைத்து கொடுக்க முடியாது ஏன்னா சைவத்தை மட்டும் சாப்பிடுபவர்கள் அசைவத்தை பார்த்தாலே குமட்டும்..அதே சமையம் மனசு கஸ்டமாகவும் இருக்கும் அய்யோ அவர் ஆசைக்கு சமைத்து கொடுக்க முடியலயேன்னு ரொம்ப கஸ்டப்பட்டு இருப்பீர்கள் இல்லையா?எப்படியோமா அவர் இப்ப சைவமும் சாபிடுறார் அது சந்தோசம்தான் அதுக்கு முக்கிய காரணம் உங்க உணவு டேஸ்ட்டே காரணம் அதொட உங்கமேல் இருக்கும் அன்பு இதுதான் இருக்க முடியும்
சமைத்து கலக்குங்க வாழ்த்துகள்..ரொம்ப கெட்டியா இல்லாமல் பார்த்துகங்க ஓகேவா செய்த பின் மறக்காம மின்னூட்டம் தாங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு