பருப்பு சேமியா உசிலி

தேதி: April 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு- அரை கப்
கடலைப்பருப்பு- அரை கப்
பச்சைமிளகாய்-3
வற்றல் மிளகாய்- 3
பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
சேமியா- 2 கப்
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்[பொடியாக அரிந்தது]- அரை கப்
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
தேங்காய்த்துருவல்- அரை கப்
தேவையான உப்பு
எண்ணெய்- 5 மேசைக்கரண்டி


 

பருப்பு வகைகளை போதுமான நீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு நீரை வடித்து மிளகாய்கள், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
இத்துடன் சேமியாவை நன்கு கலந்து இந்த கலவையை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்தெடுக்கவும்.
ஆறியதும் இதை உதிர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகைப் போடவும்.
பிறகு உளுத்தம்பருப்பு போட்டு அது சிவந்ததும் வெங்காயம், தக்காளி, பெருங்காயப்பொடி செர்த்து நன்கு குழைய வதக்கவும்.
கறிவேப்பிலை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
உதிர்த்த உசிலியைப்போட்டு நன்கு ஒன்று சேருமாறு கிளவும்.
இறுதியில் தேங்காய்த்துருவல் சேர்த்து சில வினாடிகள் கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

பொட்டுகடலை சட்னியுடன் மிக பொருத்தமாகவும், சுவை அலாதியாகவும் இருந்தது நன்றி மேடம்.
நான் சேமியவிற்கு பதில் ஸ்பக்கெடி உபயோகித்து செய்தேன்.

பி. கு:
சிலம்பாட்டம் படத்தில் ய்நாயகியை பெண் பார்க்க வருபவர், பருப்பு உசிலி செய்ய தெரியுமா என்று கேட்பார். இதை செய்யும் போது அக்காட்சி நினைக்கு வந்துவிட்டது. அப்படி கேட்டதற்காக அப்பெண்ணிடம் நல்ல அடி வாங்குவார் (அப்படத்தின் காமெடி சீன்களில் இதுவும் ஒன்று.)

indira

அன்புள்ள இந்திரா!

தங்களின் அன்பான பின்னூட்டம் எனக்கு மிகவும் மகிழ்வைக் கொடுத்தது. மிகவும் சுவையாக இருந்தது என எழுதியதற்கு மிக்க நன்றி, இந்திரா!
பொதுவாய் பருப்பு உசிலி என்பது இந்த பருப்பு வகைகளை மிளகாய் வற்றல், காயம், உப்புடன் கொரகொரப்பாக அரைத்து சிறிது எண்ணெயில் மிதமான தீயில் வதக்கி எடுத்தால் அவை வெந்து மிருதுவான உசிலி கிடைக்கும். பீன்ஸ், கொத்தவரை பொரியல் செய்து இறக்கும்போது தேங்காய்ப்பூவுடன் இதையும் கலக்க வேண்டும். இந்த உசிலியைச் சேர்க்கும்போது காய்கறிக்கு தனி சுவை கிடைக்கும். ஒரு வேளை உங்களுக்கு இந்த பருப்பு உசிலியைப் பற்றித் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் ஒரு விளக்கம் சொன்னேன்.

ஐ மனோ மேடம், மேலும் ஒரு குறிப்பு எனக்காக கொடுத்தற்கு மிக்க நன்றி. இல்ல மேடம் எனக்கு இது பற்றி முன்பே தெரியாது. பெயரை வைத்து அய்யர் வீட்டு பதார்த்தம் என்று நினைத்ததுண்டு. ஒருவேளை வீட்டில் அம்மா செய்து இருந்தாலும், எங்கள் வீட்டில் வேறு ஏதாவது பெயரிட்டு சொல்லியிருக்கலாம். நான் தீவிரமாக, தனியாக சமைக்க ஆரம்பித்ததிலிருந்துதான் நிறைய தெரிந்து கொண்டேன். அதற்கு முன் சாப்பாடு மேசைக்கு சாப்பிட செல்வதோடு சரி. முதுகலை முடித்து வேலைக்கு சென்றவுடன் நானே எல்லாம் வாங்கி, சமைத்து சாப்பிட வேண்டியதாயிற்று. அன்றிலிருந்து சமையலிலும் ஆர்வம் பற்றிக்கொண்டது.
என்னவோ தெரியல மேடம் உங்ககிட்டா பேசும்போது கொஞ்சம் கம்போட்டபிளா ஃபீல் (Comfortable feel) வருது அதான் ரொம்ப கதைய போட்டுட்டேன்.

indira

அன்புள்ள இந்திரா!

பருப்பு உசிலி பற்றிய விளக்கங்கள் ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. நீங்கள் நினைத்தது சரிதான். இது பிராமண சமையல் பாகம்தான்.

நமக்கு நாமே சமைத்து சாப்பிட நேரும்போது விதம் விதமாக சமைத்து சாப்பிட்டால்தான் சுவையாகவும் வித்தியாசமாகவும் நாட்கள் ஓடும். உங்களின் ஆர்வத்தை நான் பாராட்டியே ஆக வேண்டும். உற்சாகமும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் விரைவில் ஒரு ‘சிறந்த சமையலரசி’ ஆகி விடலாம்!!