மீன் கோஃப்தா

தேதி: April 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளில்லாத, வேக வைத்த மீன் துண்டுகள்- 2 கப்
இஞ்சி விழுது- முக்கால் ஸ்பூன்
பூண்டு விழுது- முக்கால் ஸ்பூன்
வெள்ளை சாஸ்
தேவையான உப்பு
வெள்ளை சாஸ் தயாரிக்க:
பால்- முக்கால் கப்
எண்ணெய்- முக்கால் மேசைக்கரண்டி
சோள மாவு- 1 மேசைக்கரண்டி[heaped]
மிளகுப்பொடி- அரை ஸ்பூன்
தேவையான உப்பு


 

எண்ணெயை சூடு படுத்தவும்.
சோளமாவைச் சேர்த்து மெல்லிய தீயில் கிளறவும்.
பால், மற்ற பொருள்களைச் சேர்த்து சாஸ் கெட்டியாகும்வரை சமைக்கவும்.
மீன் துண்டங்களை பிசைந்து கொள்லவும்.
அத்துடன் சாஸ், இஞ்சி பூண்டு விழுதுகள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகள் செய்யவும்.
மிதமான சூட்டில் எண்ணெயை சுட வைது பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ ஆன்ட்டி.... கோப்தா என்பது கிரேவியுடன் உள்ளது என்று நினைத்திருந்தேன்....

இந்த கோப்தாவை டின் டூனா ( canned Tuna in water) வைத்து செய்யலாமா?
எண்ணயில்லாமல் பேக் செய்யலாமா .. அப்படியானால் modified ரெசிபி தர முடியுமா ப்ளீஸ்!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இந்த குறிப்பு மட்டுமில்லை, வேறு வகையான மீன் கட்லட்களுக்கும் புட்டு, உருண்டைகளுக்கும் அதிக smell இல்லாத மீன் வகைள்தான் அதிக ருசியைக் கொடுக்கும். tinned Tuna சிறிது smell அதிகம் என்பதால் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பொதுவாக ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நான் உபயோகப்படுத்துவதில்லை. அதனால் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. இதனை நான் மைக்ரோவேவ் முறையில் செய்து பார்த்து விட்டு உங்களுக்கு மறுபடியும் எழுதுகிறேன்.

எனக்கு மீன் சமைப்பதில் அதிகம் அனுபவம் இல்லை... உங்கள் ஆலோசனைக்கு நன்றி....
Let me try with tilapia first and tell you. I will be away for few days. sometime in the next week I will let u know

ila

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..