www.arusuvai.com
மீன் கோஃப்தா
தேவையானப் பொருட்கள்
- முள்ளில்லாத, வேக வைத்த மீன் துண்டுகள்- 2 கப்
- இஞ்சி விழுது- முக்கால் ஸ்பூன்
- பூண்டு விழுது- முக்கால் ஸ்பூன்
- வெள்ளை சாஸ்
- தேவையான உப்பு
- வெள்ளை சாஸ் தயாரிக்க:
- பால்- முக்கால் கப்
- எண்ணெய்- முக்கால் மேசைக்கரண்டி
- சோள மாவு- 1 மேசைக்கரண்டி[heaped]
- மிளகுப்பொடி- அரை ஸ்பூன்
- தேவையான உப்பு
செய்முறை
- எண்ணெயை சூடு படுத்தவும்.
- சோளமாவைச் சேர்த்து மெல்லிய தீயில் கிளறவும்.
- பால், மற்ற பொருள்களைச் சேர்த்து சாஸ் கெட்டியாகும்வரை சமைக்கவும்.
- மீன் துண்டங்களை பிசைந்து கொள்லவும்.
- அத்துடன் சாஸ், இஞ்சி பூண்டு விழுதுகள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகள் செய்யவும்.
- மிதமான சூட்டில் எண்ணெயை சுட வைது பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
-