www.arusuvai.com
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல்
தேவையானப் பொருட்கள்
- சர்க்கரைவள்ளிக்கிழங்கு- அரைக்கிலோ
- வெங்காயம்-ஒன்று
- பூண்டு- இரண்டு பற்கள்
- இஞ்ஜி- ஒரு சிறிய துண்டு
- பச்சைமிளகாய்-நான்கு
- மஞ்சத்தூள்-அரைத்தேக்கரண்டி
- தனியாத்தூள்-ஒரு த்தேக்கரண்டி
- மிளகாய்த்தூள்-அரைத்தேக்கரண்டி
- தேங்காப்பூ -அரைக்கோப்பை
- கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை-ஒரு கொத்து
- உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
- எண்ணெய்-கால்க்கோப்பை
- நறுக்கிய கொத்தமல்லி- கால்கோப்பை
செய்முறை
- கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
- இஞ்சி பூண்டை நசுக்கிகொள்ளவும்.
- வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
- அடுப்பில் வாயகன்ற சட்டியை வைத்து எண்ணெயை காயவைக்கவும், அதில் கடுகுசீரகத்தைப் போட்டு பொரிந்தவுடன் முதலில் கறிவேப்பிலை பின்பு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கினால் போதும் அதில் நசுக்கிய இஞ்சி பூண்டைப் போட்டு மற்றும் பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
- பின்பு எல்லா பொடிகளையும் சேர்த்து பச்சைவாசனைப் போகும்வ்ரை வதக்கிவிட்டு கிழங்கை போடவும்.
- கிழங்குடன் உப்புத்தூளைப் போட்டு நன்கு கிளறிவிட்டு அதன் மீது தேங்காய்ப்பூவை சேர்த்து கிளறிவிடவும்.
- கலவையை அடுப்பில் ஐந்து நிமிடம் சிம்மில் வைத்திருந்து நன்கு கிளறிவிட்டு கடைசியில் கொத்தமல்லியத் தூவி இறக்கிவிடவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
6 நபர்களுக்கு |
15நிமிடங்கள் |
20நிமிடங்கள். |