இறால் ஃப்ரைட் ரைஸ்

தேதி: April 20, 2008

பரிமாறும் அளவு: இரண்டு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
இறால் - ஆறு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
முட்டைகோஸ் - கால் கப்
முட்டை - ஒன்று
மேகி சிக்கன் கியூப் - பாதி பாக்கெட்
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பட்டர் - ஆறு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

முட்டையில் உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும்.
இறாலை சுத்தம் செய்து ஒவ்வொரு இறாலையும் மூன்றாக வெட்டி கொள்ள வேண்டும்.
முட்டை கோசை நீளவாக்கில் நறுக்கி வைக்க வேண்டும்.
பெரிய வாயகன்ற வாணலியில் முதலில் நான்கு தேக்கரண்டி பட்டைரை உருக்கி அதில் இறால், இஞ்சி பூண்டு பேஸ்ட், மேகி கியூப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதிலேயே முட்டை கோசை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதன் மேலேயே முட்டை ஊற்றி, தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கி உதிரியாக வேக வைத்து வைத்திருக்கும் சாதத்தையும் போட்டு நல்ல வதக்கி கடைசியில் மீதி பட்டரை போட்டு வதக்கி இறக்கி சூடாக சாப்பிட வேண்டும்.


ஹோட்டல் மாதிரி ஃப்ரைட் ரைஸ் செய்து பார்க்கனுமா?
இதே மாதிரி சிக்கனிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மர்லியா இறால் பிரைட் ரைஸ்

ஜலீலா

Jaleelakamal

தேங்ஸ்க்கா நான் ஆல்ரெடி இராலை வரட்டி வைத்து இருக்கேன் மசாலா போட்டு அதில் பண்ணலாமா??பெப்பர் பவுடட் வ்யிட்,பிலேக் எதை வாணாலும் எடுத்துகலாம்தானே?

மனசு மாறட்டும் துஆ செய்யுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பராவாயில்லை செய்யுங்கள், முட்டை போட்டதும் கொத்திய மாதிரி ஆகனும்.
இறால் வாட்டியிருந்தாலும் பராவாயில்லை.
மிளகு காரம் தேவை பட்டால் இன்னும் கடைசியில் தூவி கொள்ளுங்கள்.
தூவா செய்கிறேஎன் பா அல்லா ராகத்தாக்க்ட்டும்.
நான் இவ்வலவு நேரம் டிரை செய்து உள்ளே நுழைய முடியல இப்பதான் வந்தது.
ஜலீலா

Jaleelakamal

இறால் பிறைட் றைஸ்,
சூப்பரோ சூப்பர், ஜலீலாக்கா நான் இம்முறை செய்த உங்கள் குறிப்புக்களில், எனக்கு அதிகம் பிடித்தது இதுதான், இது சொல்லிப் புரியாது... சாப்பிட்டால்தான் புரியும்... இல்லையாக்கா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இறால் பிரைட் ரைஸ் ரொம்ப பிடித்து போச்ச மிகுதியான் சந்தோஷம் இரண்டு எனக்கு பிடித்ததும் நீங்கள் செய்து பார்த்ததும்
ஜலீலா

Jaleelakamal

இன்று உங்கள் இறால் இல்லை சிக்கன் (நீங்கள் option கொடுத்திருந்தீங்களே) ஃபிரை ரைஸ் செய்தும் சாப்பிட்டாச்சு ரொம்பவே நல்லா இருந்தது.செய்யவும் சுலபமாக இருந்தது.எளிமையான குறிப்புக்கு ரொம்ப நன்றிக்கா:-)

டியர் ஜாஸ்மின் (இறால்) சிக்கன் பிரைட் ரைஸ் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

Jaleelakamal

திருமதி. அதிரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த இறால் ப்ரைட் ரைஸின் படம்

<img src="files/pictures/prawn_rice.jpg" alt="image" />

அதிரா ரொம்ப சூப்பர் இறால் பிரைட் ரைஸ்,, படம் எடுத்து அனுப்பிய அதிராவிற்கு ஒரு இஞ்சி ரீ..

அட்மினுக்கும் நன்றி
ஜலீலா

Jaleelakamal