கடலை பருப்பு கீரை சாதம்

தேதி: April 20, 2008

பரிமாறும் அளவு: ஐந்து நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாசுமதி அரிசி - இரண்டு கப்
எண்ணெய் + பட்டர் - 50 மில்லி
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - ஒன்று
கடலைப்பருப்பு - 50 கிராம்
அரை கீரை - அரை கட்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - சிறிது
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


 

அரிசியையும், கடலை பருப்பையும் களைந்து இருபது நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
கொத்தமல்லி கீரை, புதினாவை தனித்தனியாக மண் இல்லாமல் ஆய்ந்து அலசி வைக்கவேண்டும்.
வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை நான்காகவும் நறுக்கி வைக்க வேண்டும்.
குக்கர் (அ) ரைஸ் குக்கரில் எண்ணெய் + பட்டரை போட்டு உருக்கி பட்டை , கிராம்பு, ஏலக்காயை போட்டு வாசனை வந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். சிவக்க விட வேண்டாம்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மஞ்சள் தூள் கொத்தமல்லி, புதினாவை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி அதில் இரண்டு கப் அரிசிக்கு 3 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு நான்காக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும்.
சுவையான கடலை பருப்பு கீரை சாதம் தயார்.


இது காலை டிபனுக்கு (அ) ஆபிஸுக்கு சாப்பாடு கட்டி கொண்டு போக வசதியாக இருக்கும். தொட்டுகொள்ள மிளகாய் சட்னி, இல்லை புதினா சட்னி அரைத்து கொள்ளலாம். சும்மாவே சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்