www.arusuvai.com
மட்டன் மார்வெல்
தேவையானப் பொருட்கள்
- கறி --1/2கிலோ
- பெரிய வெங்காயம் --100கிராம்
- இஞ்சி --1துண்டு
- பூண்டு --8பற்கள்
- பச்சை மிளகாய் --4
- கொத்துமல்லித் தழை --1சிறுகட்டு
- மிளகாய்த்தூள் --3டாஸ்பூன்
- சீரகம் --1டாஸ்பூன்
- தேங்காய்த் துருவல் --2டேபிள் ஸ்பூன்
- முந்திரிப் பருப்பு --10கிராம்
- தயிர் --100மி.லி
செய்முறை
- கறியை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து ஊற வைக்கவும்.
-
-
- வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
-
-
- தேங்காய்த் துருவலுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
-
-
- இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், கொத்துமல்லித்தழையில் பாதி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
-
-
- பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி, மட்டன் துண்டுகள் சேர்த்து எண்ணெய் மேலாக மிதக்கும் வரை வதக்கி, அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
-
-
- வதங்கியதும் தேவையான அளவு நீர், அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
-
-
- மசாலா கெட்டியானதும் நறுக்கிய கொத்துமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.