உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ராயல் கோழிக்கறி பொடிமாஸ்

 


தேவையானப் பொருட்கள்

  • 1/2 கிலோ கோழிக்கறி அரைத்தது (minced)
  • 4-வெங்காயம் நறுக்கியது
  • 3-தக்காளி
  • 5-பச்சை மிளகாய்
  • 2-தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • கொஞ்சம் கறிவேப்பிலை, புதினா இலைகள்
  • கொத்துமல்லி இலைகள்
  • உப்பும் மிளகாய்த்தூளும் மஞ்சள்தூளும் தேவைக்கேற்ப
  • 2 பெரிய கரண்டி எண்ணெய்

செய்முறை

  • அரைத்த கறியை நன்றாகக் கழுவி பிழியவும்
  • எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  • உப்பும், அரை தேக்கரண்டி மஞ்சள் தூளும், மிளகாய்த்தூளும் சேர்த்து இதனுடன் இஞ்சிப்பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்
  • இதனுடன் வெட்டிய தக்காளித்துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்
  • இத்துடன் அரைத்த கறியை சேர்த்து 10 நிமிடங்கள் வறுக்கவும். இத்துடன் எல்லா கறிவேப்பிலை, புதினா சேர்த்து வதக்கி நன்றாக வேகும் வரை வறுக்கவும்
  • இறுதியில் பச்சை மிளகாய்த்துண்டுகளையும் கொத்துமல்லி இலைகளையும் போட்டு பிரட்டி பரிமாறவும்

வழங்கியவர்

மெஹர் சுல்தான்

random food image


comments