www.arusuvai.com
பேச்சுலர்ஸ் தந்தூரி சிக்கன்
தேவையானப் பொருட்கள்
- சிக்கன் லெக்ஸ்/தொடையுடன் கூடியது-ஆறு எண்ணிக்கை
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-தலா ஒருத்தேக்கரண்டி
- தந்தூரி பேஸ்ட்- இரண்டு மேசைக்கரண்டி
- மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி
- சோயாசாஸ்-ஒரு மேசைக்கரண்டி
- எலுமிச்சை சாறு- இரண்டு தேக்கரண்டி
- உப்பு- ஒரு தேக்கரண்டி
- எண்ணெய்-இரண்டு தேக்கரண்டி
செய்முறை
- சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து அதன் தோலை நீக்கிவிட்டு சதைப் பகுதியை கூரிய கத்தியால் நீளவாக்கில் வகுந்துக் கொள்ளவும்.
- மற்ற மேற்கூறிய அனைத்துப் பொருட்களை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கலக்கி சிக்கன் துண்டுகளைப் போட்டு கைகளால் நன்கு பிசிறி அரைமணி நேரம் ஊறவிடவும்.
- பின்பு அவெனில் பயன்படுத்தும் தட்டில் வைத்து குறைந்தது 350 டிகிரி சென்டிகிரேட்டில் வைத்து கிரில் செய்யவும். ஊறிய கலவை மீதமிருந்தால் அதை கைவசம் வைத்திருக்கவும்.
- கிரில்லில் சிக்கனிலிருக்கும் நீர் அனைத்தும் வடிந்தவுடன் ஊறவைத்த கலவையை இரண்டு புறமும் பூசிவிட்டு மீண்டும் கிரில் செய்யவும்.குறைந்தது முப்பது நிமிடத்தில் தயாராகிவிடும்.
- பிறகு அவற்றை ஒரு அலுமினிய ஃபாயில் பேப்பரில் ஐந்து நிமிடம் காற்று புகாமல் சுற்றி வைத்திருந்துவிட்டு பரிமாறவும்.இவ்வாறு செய்வதால் சிக்கன் சாப்பிட மிருதுவாக அதிக சுவையாகவும் இருக்கும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
6 நபர்களுக்கு |
30நிமிடங்கள் |
30நிமிடங்கள் |