En Paatti

Vanakkam,
En Paattirkku (Grandmother)niraiyeh saappidugiraar aanal sariyah malam veliyaaguvatillai. Atanaal vayiru uppusamagah aagirathu.Moocchuu vaangugirathu.En Paattirkku vayathu 78..
Malam sariyaagah povaturkku oru vali sollungal pls...

Nadri..
indra.

duphalac என்ட்ர மருந்தை இரவில் ஒரு ஸ்பூன் சாப்பிடுஙகள். மருநாள் எப்படி மலம் போகிரதுனு சொல்லுங்கள். 2 மு.
ரை போனல் மருந்து அள்வை குரைத்துகொள்ள்வும். பிரகு தெரிவிக்கவும்

அன்புள்ள உமா(521979)! இப்போது உங்கள் பாட்டிக்கு எப்படியுள்ளது? குணமாகவே ஆகியிருந்தாலும் பொதுவான தகவலுக்காக இதை எழுதுகிறேன்.

பொதுவாகவே வயதானவர்களுக்கு ஏற்படும் பல அசௌகரியங்களில் மலச்சிக்கல், அஜீரணம், வாயுக் கோளாறுகள் என்று வயிறு சம்மந்தப்பட்டவைதான் முதன்மை வகிக்கின்றன. ஒவ்வொரு கோளாறுகளுக்கும் சிற்சில காரணங்கள் இருப்பதுபோல், இந்த மலச்சிக்கலுக்கும் சில காரணங்கள் உள்ளன. எந்த வயதில், எதை சாப்பிட்டால், எவ்வளவு சாப்பிட்டால், எந்த நேரத்தில் சாப்பிட்டால், எந்த முறையில் சாப்பிட்டால் செரிமாணமாகுமோ, அதையெல்லாம் கவனத்தில் கொண்டு நம் உணவு முறைகளை அமைத்துக் கொள்வது, இதுபோன்ற அசௌகரியங்களிலிருந்து பெரும்பாலும் நாம் தப்பித்துக்கொள்ளலாம். மலச்சிக்கல் வருவதற்கான எனக்குத் தெரிந்த சில காரணங்களை கூறுகிறேன்.

- காலைக் கடன்களில் மிக முக்கியமானது டாய்லெட் போவது. அதற்கான தேவை ஏற்படும்போது, எந்த காரணம் கொண்டும் அதை செய்து முடிக்காமல் தள்ளிப்போடுவது, நாளடைவில் கண்டிப்பாக அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

- உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு குறையும்போது மலச்சிக்கல் ஏற்படும்.

- போதிய நடையோ, உடல் உழைப்பு சிறிய அளவில் கூட இல்லாத முதியவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

- நார்ச்சத்து இல்லாத உணவுகளை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

- சிறுங்குடல் மற்றும் பெருங்குடல் பகுதிகள் ஏதாவதொரு நோயினாலோ அல்லது வேறு காரணங்களாலோ பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்புகள் அல்லது அறிகுறிகளில் ஒன்றாக மலச்சிக்கல் தோன்றும்.

- அலோபதி மருந்துகளினல் ஏற்படும் சைட் எஃபெக்ட்களினால் கூட மலச்சிக்கல் உண்டாகும்.

ஆக காரணம் எதுவாக இருந்தாலும், என்னைப்பொறுத்தவரை இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முதலில் அலோபதிக்கு செல்லாமல், பலன் தரக்கூடிய வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கலாம். வீட்டில் செய்து சாப்பிட முடியாதவர்கள் சித்த, ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும் தகுந்த மூலிகை மருந்துகளை விபரம் தெரிந்தவர்களின் ஆலோசனையுடன் சாப்பிடலாம். சரியான முறையில் அவற்றை செய்தும் சரியாகாதபோது, தேவையான டெஸ்ட்களை எடுத்துக்கொண்டு அதன்படி முடிவு செய்துக்கொள்ளலாம். எதையுமே ஆரம்பத்தில் செய்துக்கொண்டால், அலோபதிக்கு அடிமையாகாமல் நம்மை பெரும்பாலும் காப்பாற்றிக்கொள்ளலாம். ஓ. கே. இப்போது மலச்சிக்கலுக்கான எனக்கு தெரிந்த சில வீட்டு வைத்தியங்களை சொல்கிறேன். எது உங்களுக்கு சுலபமோ முதலில் அதை செய்து பாருங்கள்.

- தினமும் காலை, மாலை 2 (1+1) பூவன் வாழைப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். ( மலை வாழைப்பழம் கொடுக்கக்கூடாது. சளி, இருமல், சர்க்கரை நோய்,ஆஸ்துமா போன்றவை இருந்தால் மட்டும் வாழைப்பழத்தை தவிர்த்துக்கொள்ளவும்)

- கொய்யாப் பழம் கூட தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

- நார்சத்து நிறைந்த வாழைத்தண்டு, கீரைவகைகள் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

- காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கறுப்பு எள்ளை எடுத்து வாயில் போட்டு, நன்கு மென்று சாப்பிட்டு 1/2 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்தினால் சுலபமாக டாய்லெட் போகலாம். ( பாட்டிக்கு பல் இல்லாவிட்டால் மிக்ஸியில் பொடித்து கொடுங்கள்)

- விளாம்பழம் கிடைத்தால் பச்சடி செய்து கொடுக்கலாம்.

- அல்லது வில்வபழம் கிடைத்தால், அதன் உள்ளே உள்ள சதையை எடுத்து சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 'வில்வாதி லேகியம்' வாங்கி சாப்பிட கொடுக்கலாம்.

- அத்திக்காய், முருங்கைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, காசினிக்கீரை இவற்றில் எது முடியுமோ அதை சமைத்துக்கொடுங்கள்.

- கடுக்காய்த்தோலை 50 கிராம் எடுத்து அத்துடன் ஓமம் ஒரு ஸ்பூன் சேர்த்து பொடி பண்ணி இரவு உணவுக்கு 1/2 மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் இளம் சுடுநீரில் கலக்கி அருந்தினால், காலையில் மலச்சிக்கல் இன்றி ரிலாக்ஸாக டாய்லெட் போகலாம்.

- குப்பைமேனிக்கீரை சாறு எடுத்து அதனுடன் விளக்கெண்ணெயை சேர்த்து இளஞ்சூடாக காய்ச்சியும் கொடுப்பார்கள்.

இதுபோன்ற இயற்கையான முறைகளைதான் முதலில் செய்து பார்க்கவேண்டும். அல்லது மருந்திற்குப் பதிலாக எனிமாவும் எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்திய முறையில் பயன்படுத்தப்படும் எனிமாவைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் விசாரித்து அதை எடுத்துக்கொள்ளலாம். முதலில் ஒருசில நாட்களுக்கு மட்டும் எனிமா எடுத்துக்கொண்டால், பிறகு தானாகவே நார்மலாக டாய்லெட் போகும். இயற்கையான எனிமா எடுப்பது எப்படி என்று முடிந்தால் எங்கள் குடும்ப வைத்தியரிடம் ஃபோனில் கேட்டு சொல்கிறேன்.

உங்கள் பாட்டியின் உடல்நிலைக்கேற்ற எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளாக பார்த்து, முறையாக சமைத்து, தேவையான அளவோடு கொடுங்கள். மூச்சுத்திணறல் உள்ளதாக சொன்னீர்கள். அதனால், 3 வேளை உணவை சிறிது சிறிதாக 4 அல்லது 5 வேளைகளாகக்கூட கொடுங்கள். மற்றவை ஞாபகம் வந்தாலும் சொல்கிறேன்.

Nandri...

Migavum Nandri...

மேலும் சில பதிவுகள்