தேவையானப் பொருட்கள்
- சிக்கன் எலும்பில்லாது - இரு நூரு கிராம்
- பூண்டு - முன்று பல் பெரியது
- காஞ்ச மிளகாய் - ஒரு தேக்கரன்டி ( வருத்து திரித்தது)
- மேகி சிக்கன் கியுப் - அரை
- டொமேடோ பேஸ்ட் - இருநூரு கிராம்
- உப்பு - ஒரு தேக்கரண்டி (தேவைக்கு)
- பட்டர் - ஐம்பது கிராம்
- கருவேப்பிலை - ஒரு கை பிடி
- குடை மிளகாய் - அரை (பொடியாக அரிந்தது)
செய்முறை
- காஞ்ச மிளகாயை லேசாக வருத்து காய்ந்த மிக்சியில் திரித்து கொள்ளவேண்டும்.
-
-
- சிக்கனை கழுவி பொடி துண்டுகளாக நறுக்கி அதில் காஞ்ச மிளகாய் பொடித்தது, பூண்டு அரைத்தது, டொமேட்டோ பேஸ்ட், மேகி கியுப், உப்பு சேர்த்து பத்து நிம்டிஅம் ஊறவைக்கவும்.
- சட்டியை காய வைத்து பாதி பட்டரை போட்டு அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு வேக வைக்க வேண்டும்.
- வெந்ததும் அதில் தனியக ஒரு வானலியில் மீதி உள்ள பட்டரை உருக்கி அதில் குடை மிளகாயையும் கருவேப்பிலையையும் அதில் வருத்து வெந்த சிக்கன் மேலே ஊற்றி கலக்க வேணும்.
-
குறிப்பு
இது செய்வது ரொம்ப சுலபம்.இது பிரட் ரைஸுக்கும், பரோட்டாவிற்கும் நல்ல காம்பினேஷன்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 person |
15 min |
10 min |