தஞ்சாவூர் கோழி ஆப்பம்

தேதி: April 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

மைதா - இரண்டு கப்
முட்டை - இரண்டு
தேங்காய் பால் - ஒரு டம்ளர்
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு
பச்சை மிளகாய் - மூன்று
உப்பு - ஒரு தேக்கரன்டி
இட்லி சோடா - ஒரு பின்ச்


 

முட்டையை நுரை பொங்க அடித்து வைக்க வேண்டும்.
உப்பு, பச்சை மிளகாய், வெங்காயம், சோம்பு, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
மைதா மாவில் அரைத்ததை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
பிறகு அடித்து வைத்துள்ள முட்டை, தேங்காய் பால், இட்லி சோடா சேர்த்து கலக்கவும்.
தோசை மாவு பதத்திற்கு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
இப்போது தோசைகளாக வார்க்கவும்.


இதற்கு தொட்டுக்கொள்ள கோழி குருமா நல்லா இருக்கும், வெஜ் குருமா, சர்க்கரை, மிளகாய் பொடியும் நல்ல இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள ஜலீலாக்கா
இன்று உங்களது கோழி அப்பாம் செய்து பார்த்தேன்..முட்டைக் குழம்புடன் சூப்பராக இருந்தது..எனக்கு இது போன்ற பதார்த்தங்கள் மிகவும் பிடிக்கும்..என் மகள் வெறும் அப்பத்தை பிச்சி பிச்சி சாப்பிட்டாள்..மிகுந்த சந்தோஷம்..நன்றி

தளிகா அஸ்ஸலாமு அலைக்கும்

ரிமா குட்டி இந்த ஆப்பம் பிடித்ததா, அப்படியே மைதாமாவு இனிப்பு தோசையும் செய்து கொடுங்கள். ரொம்ப பிடிக்கும். என் ரெஸிபி கூடுமானவரை குழந்தைகள் விரிப்பபடுவதுதான் காரமும் கம்மியாக இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal