ஹமூர் மீன் கட்லெட்

தேதி: April 21, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஹமூர் மீன் - அரை கிலோ
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
முட்டை வெள்ளை கரு - ஒன்று
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

ஹமூர் மீன் எலும்பில்லாதது சுத்தமாக கழுவி சதுர வடிவமாக நறுக்கி கொள்ளவும்.
முட்டை வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து அதில் மிளகாய் தூள், உப்பு மைதா, எண்ணெய் கலந்து மீனில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு எப்படி பிடிக்குமோ அப்படி டீப் ப்ரை (அ) ஷலோ ப்ரை பண்ணவேண்டும்.


இது செய்து வைத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி ஹமூர் மீன் வாங்க வேண்டியது வரும்.

மேலும் சில குறிப்புகள்