மிளகு குழம்பு

தேதி: April 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வறுத்து பொடிக்க:
மிளகு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
கொதிக்க வைக்க:
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய் - மூன்று தேக்கராண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி
வெந்தயம் - ஐந்து
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி


 

வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து ஆறியதும் காய்ந்த மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்க வேண்டும்.
புளியை கரைத்து மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
புளி வாசனை அடங்கியதும் பொடித்த பொடியை போட்டு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்ட வேண்டும்.
சுவையான மிளகு குழம்பு ரெடி


குழந்தை பெற்றவர்களுக்கும், சளி இருமல் உள்ளவர்களுக்கும் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

I tried your receipe today. It came out very well. Thanks Jaleela madam..

ஜலீலா மேடம்,இன்று உங்களின் மிளகு குழம்பு ரெசிப்பி செய்தேன்.சூப்பராக வந்துள்ளது.என்னவருக்காக வெயிட்டிங்!சுட சுட மிளகு குழம்பு+மைக்ரோவேவில் சுட்ட அப்பளம்+உருளை கிழங்கு வறுவல்.ஆறிட்டே இருக்குதே ஜல்தி வரமாட்டராங்களே.
மீண்டும் நன்றி மேடம்.
Life is like a mirror.Smile at it.

என்ன அருன் பாலா மிளகு குழம்பு சாப்பிட்டச்சா?
உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி/ஆ சுட்ட அப்பளமா நல்ல இருக்குமே?

ஜலீலா

Jaleelakamal

Hi Jaleela Mam,

Yesterday i cooked your Milagu kuzhambu. It is tasty. thank you for giving this.

Leela Nandakumar.

Leela Nandakumar

டியர் லீலா மிளகு குழம்பு பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal