www.arusuvai.com
மிளகு குழம்பு
குழந்தை பெற்றவர்களுக்கும்,சளி இருமல் உள்ளவர்களுக்கும் நல்லது
தேவையானப் பொருட்கள்
- வருத்து பொடிக்க
- -------------
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- காஞ்ச மிளகாய் - இரண்டு
- துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
- கொதிக்க வைக்க
- ---------------
- புளி - எலுமிச்சை அளவு
- மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- தாளிக்க
- --------
- நல்லெண்ணை - முன்று தேக்கராண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- கருவேப்பிலை - ஒரு கை பிடி
- வெந்தயம் - ஐந்து
- உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை
- வருத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வருத்து ஆறியடும் காய்ந்த மிக்சியில் போட்டு பொடித்து வைக்க வேண்டும்.
- புளியை கரைத்து முன்று டம்ளர் தண்ண்கர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொத்திக்க விடவேண்டும்.
-
- புளி வாசனை அடங்கியதும் பொடித்த பொடியை போட்டு கொதிக்கவிட்டு இரக்க வேண்டும்.
- கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்ட வேண்டும்.
- சுவையான மிளகு குழம்பு ரெடி
-
-
-
-
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
15 min |
10 min |