உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

லெமென் டீ

 

அதிகமாக லூஸ் மோஷன் ஆகும் போது என்ன செய்வது என்று தெரியாது. அப்போது இந்த டீயை உடனே போட்டு குடித்தால் கட்டுப்படும்.

தேவையானப் பொருட்கள்

  • .
  • தண்ணீர் - ஒரு டம்ளர்
  • டீதூள் - முக்கால் தேக்கரண்டி
  • உப்பு - ஒரு பின்ச்
  • தேன் - ஒரு மேசை கரண்டி
  • எலுமிச்சை சாறு - ஒரு பழம்

செய்முறை

  • தண்னீரை நல்ல கொதிக்க வைத்து டிக்காஷன் ஸ்ராங்காக இருக்கனும். அதில் உப்பு, தேன்,லெமென் ஜூஸ் கலந்து குடிக்க வேண்டும்.

குறிப்பு:

லூஸ் மோஷன் ஆகும் போது பால் சேர்க்க கூடாது, குலோப் ஜாமுன் ஜீரா வுடன் சாப்பிட்டாலும் கேட்கும். நோன்பு கஞ்சி மாதிரி கேரட் கஞ்சி செய்து குடிக்கனும்,ஆப்பிலும் சாப்பிடலாம்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

1 person 5 min 5 min
  random food image


comments
ஜலீலாக்கா
ஏப்ரல் 21, 2008 - 4:54am - வழங்கியவர் அதிரா

இந்த ரீ நானும் குடிப்பேன். ஆனால் நான் குடிப்பது- தொண்டை அதிகமாக நொந்தால் இப்படிக் குடித்தால் சுகம் வந்துவிடும். நீங்கள் இப்படி ரீ க்கெல்லாம் குறிப்பெழுதுவது, என்போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன். ரீ தானே இதற்கெல்லாம் என்ன குறிப்பு என்று நினைக்கக் கூடாது. நான் கூட நீண்ட நாள் கேட்க நினைத்தேன்... அந்த நீங்கள் கூறிய ஏலக்காய் ரீ பற்றி. நீங்களே கொடுத்துவிட்டீங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

thanks
ஏப்ரல் 21, 2008 - 5:33am - வழங்கியவர் priyaudai

hello jaleela madem,
its great that u r giving the receipe's medically also.. this lemon tea is very useful for me.. yet now i dont know how to make lemon tea... but u have given it.. thanks a lot..

கொழுப்பு கரைய
ஏப்ரல் 21, 2008 - 6:59am - வழங்கியவர் thalika

ஜலீலாக்கா சுத்தமா கட்டுப்படாத லூஸ் மோஷனுக்கு 3 வேளையும் வெறும் பன்,இளநீர் மட்டும் சாப்பிட்டால் சரியாகுமாம்..
அது மாதிரி கேக்கனும்னு நெனச்சேன் என் உறவினர்கள் எல்லாம் வீட்டில் நல்ல நெய் சேர்ந்த உணவு ஹெவியா சாப்பிட்டா உடனே எலுமிச்சை ஜூஸ் குடிப்பாங்க.அப்ப கொழுப்பு உடலில் சேராமல் கரையுமாம்.
அதாவது 1/2 கப் அளவு எலுமிச்சை ஜூஸும்.லேசா உப்பும் .1/4 கப் தண்ணியும்..புளிப்புக்கு மூளையில் உள்ள புழுவெல்லாம் வெளியே வந்துடும் கஷ்டப்பட்டு குடிக்கிராங்க.
என்ன சொல்ரீங்க இப்படி குடிக்கலாமா?

தளிக்கா அஸ்ஸலாமு அலைக்கும்
ஏப்ரல் 21, 2008 - 7:04am - வழங்கியவர் Jaleela Banu

ஹி தளிக்கா
அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கு ஹெவியா சாப்பிட்டு விட்டு லெமென் அது தெரியாதூ
ஊரி லெமென் சால்ட் சோடா குடிப்பார்கள்,
கல்யாண வீட்டுக்கு போய் விட்டு வருகிற வழியில் நின்று குடித்து விட்டு தான் போவார்கள்.

கொழுப்பு கறைய வெண்ணீரில் லெமென் தேன் போட்டு காலையில் டெய்லி குடிக்கனும் என்பார்கள்.

அதற்கு பதில் இந்த டீ குடித்தால் கூட கொழுப்பு கறையும்.

ஜலீலா

ஹைய் பிரியா
ஏப்ரல் 21, 2008 - 7:08am - வழங்கியவர் Jaleela Banu

ஹைய் பிரியா இந்த குறிப்பு உங்களுக்கு உதவியதா அப்ப ரொம்ப சந்தோஷம்.

யாராவது ஏதாவது சொல்வீர்கலோ என்று தான் டீ ரெஸிபி நிறைய கொடுக்கவில்லை.

ஆனால் நிறைய சகோதரிகள் டீ கூட போட தெரியாமல் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு இது உதவும். என்று தான் கொடுத்தேன்.
ஜலீலா

வஸ்ஸலாம் அக்கா
ஏப்ரல் 21, 2008 - 7:09am - வழங்கியவர் thalika

அப்படியா டீன்னா இன்னும் நல்லதாச்சே.யப்பா க்ரீன் டீ குடிப்பேன் அழுகையா வரும் கஷ்டப்பட்டு தான் குடிப்பேன்..இந்த வாரம் வீகென்ட் விட்டில் இருக்கவே இல்ல.குடும்பத்தில் எல்லோரும் ஒன்று கூடினோம்..அதிகாலை வரை பார்க்கில் இருந்தோம்.ஜோரா இருந்தது.பிசி ஆஃப் ஆகும்

அதிரா எப்படி இருக்கீங்க
ஏப்ரல் 21, 2008 - 7:13am - வழங்கியவர் Jaleela Banu

அதிரா எப்படி இருக்கீங்க.
எப்படி இருக்கிறார்கள் இரட்டையர்கள் போல் உள்ள உங்க மகன்கள்.
அதிரா தொண்டைக்கும் இதம் அளிக்கும் இந்த டீ ருசி, பார்க்க முடியது கண்ணை மூடிக்கொண்டு மருந்து மாதிரி குடித்து விடனும் பழக்க பட்டவர்களுக்கு பிடிக்கும்.
என்ன ஏலக்காய் டீ ,கரம் மசாலா டீ, இல்லை பட்டை பொடி போட்டு குடிக்கும் டீ எது வேண்டும்.
ஜலீலா

அக்கா!!ஜலீலாக்கா!!
ஏப்ரல் 22, 2008 - 4:06am - வழங்கியவர் அதிரா

அக்கா!!ஜலீலாக்கா!!
வீட்டில் 2 கிழமை பாடசாலை, நேசறி லீவு.. அதனால் என் ஹஸ்...உம் லீவு எடுத்தார். பிறகு சொல்லவா வேண்டும். நினைத்த நேரத்திற்கு எழும்பி... படுத்து... உலாத்தி.... நினைத்தநேரமெல்லாம் அறுசுவைக்கு வந்து... எல்லாமே முடிஞ்சு போச்சு... நேற்று எல்லாம் ஸ்ராட் பண்ணிவிட்டது. இனி ரைம் ரேபிளின் படிதான் இங்குகூட வர முடிகிறது.

அது சரி, எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு தெலுங்கு டொக்ரேர்ஸ் இருந்தார்கள், அவவுடைய அம்மா,அப்பா ஊரிலிருந்து வந்திருந்தார்கள், அந்த அம்மா தற்செயலாக ஒருநாள் எனக்கு ரீ தந்தார்... சுவையோ சுவை... எப்படி என்று கேட்டேன் , அவவுக்கு தெலுங்கை விட்டால் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியவில்லை.. எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தையும் தெரியாது...அதனால் ஒரு பவுடர் போத்தலை காட்டினார், இதுதான் போட்டேன் என்று. அதன் வாசனையில் இருந்து புரிந்து கொண்டேன்... நீங்க சொன்னதுபோல் கரம் மசாலாவேதான்.......

பின்னர் மகள் வந்ததும் கேட்போம் என்று நினைத்து அப்படியே மறந்துவிட்டேன், கொஞ்சநாட்களில் அவர்களும் மாற்றலாகி தூரப் போய்விட்டனர், அதனால் அறுசுவைக்கு வந்ததும் கேட்க நினைத்து ..... இப்போ நீங்க மாட்டிக்கிட்டீங்க... எனக்கு பவுடராக்கி போடுற நல்ல வாசனை ரீ சொல்லுங்க... அதாவது வருகிற விருந்தினர்... ஓஹோ என்று சொல்லவேணும் என்னைப் பார்த்து... ஓகே...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளிகா,
ஏப்ரல் 22, 2008 - 4:20am - வழங்கியவர் அதிரா

தளிகா!! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!!!! பார்க்குக்குப் போனதால பி.ஸி பழுதானதா? இல்லை பி.ஸி பழுதானதால பார்க்குக்குப் போனீங்களா?

சரி போகட்டும், கிறீன் ரீ குடிக்கிறீங்களா? நல்லது நானும் அடிக்கடி குடிப்பேன், முக்கியமாக அசைவம் சாப்பிட்டால் குடிப்போம்.. எண்ணெய் கொழுப்பை அகற்றி கொஞ்சம் உடம்பை ஈசியாக்கும். ஆனால் இது பற்றி இப்போ நிறையக் கேள்விப்பட்டேன். அதாவது வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. அல்சர், gastric பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

இன்னுமொன்று, சைனாவில் இதைத்தானே அவர்கள் குடிக்கிறார்கள் அதனால் அங்கே அதிகமாக குடல் புற்றுநோய் வருகிறதாம். அப்படியில்லை.... அங்கே அதிகமாக குடல் புற்றுநோய் வருகிறதாம், அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என முருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. ஏனெனில் இந்த கிறீன் ரீ ஒருவித அரிப்புத் தன்மை கொண்டது. அதனால் மிகவும் மெல்லிய சாயமாகத்தான் குடிக்க வேண்டும். இடையிடையே குடிக்கலாம். பிள்ளைகளுக்கு கூடாது...

திரும்பிப் பாருங்க தளிகா... ஒராள் எம்மைப் பார்த்து முறைப்பதை..... என்ன ஜலீலாக்கா உங்கள் குறிப்பு பகுதியில் நாம் அரட்டை பண்ணுகிறோம் என்றா... நீங்கதானே கூப்பிட்டீங்க... ஏலக்காய் ரீ.... லெமென் ரீ... வாங்க குடிச்சிட்டுப் போங்கோ என்று... ரீ குடிக்க வந்தால் கொஞ்சநேரம் அலட்டி விட்டுப் போவது உலக வழக்கம் தானே... சோ கூல் டவுண்.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா ஹஹஹா.
ஏப்ரல் 22, 2008 - 4:53am - வழங்கியவர் thalika

அதிரா ஹஹஹா.
இல்லை முதல்ல இருந்து சொல்றேன்...இந்த வாரைறுதி செம்ம ஜாலியா இருந்தது..இந்த கதை முடிஞ்சு போச்சு
இந்த வாரைறுதியில் தான் செர்வீஸ் பேக் வந்துதே விச்டாக்குன்னு அதை இன்ஸ்டால் பன்னினது தான் மக்கர் பன்ன ஆரம்பிச்சது..பிறகு ஃபார்மேட் பன்னினால் அதன் பின் அடிக்கடி ஆஃப் ஆகுது..இது மற்றொரு கதை.
ஆனால் இந்த வாரம் எனக்கு கொஞ்ச வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வரலாம்னு இருந்தேன் தகுந்த மாதிரி பிசியும் ப்ராப்லம்.
டீ ஆஹோ ஓஹோன்னு இருக்கனும் என்றால் டீ போட்ட பின் அதில் 1 கப்புக்கு 4 துளி இஞ்சி நீரும்+ஏலக்காய் தட்டியது 1 போட்டு குடிங்க..ஆஹா ஓஹோ தான்.