பழ அவல்

தேதி: April 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஊற வைத்து பிழிந்த அவல் - ஒரு கப்
துருவிய வெல்லம் - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலப்பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு பின்ச்
நறுக்கி வறுத்த முந்திரி - 2 தேக்கரண்டி
சீவிய பாதாம் - ஒரு தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் - 2 தேக்கரண்டி
நறுக்கிய ஆப்பிள் - சிறிது


 

மேலே கூறப்பட்ட அனைத்தையும் கலந்து ஒரு கப்பில் போட்டு பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்தான சிற்றுண்டி. தயாரிப்பதும் எளிது.


நாங்கள் பள்ளியில் இருந்து வந்தவுடன் எங்க அம்மா இந்த சிற்றுண்டியை செய்து தருவார்கள். வெல்லம் இருப்பதால் இரும்பு சத்து மற்றும் வைட்டமின்கள் கிடைக்கிறது.

மேலும் சில குறிப்புகள்


Comments

நீங்க சொன்னதும்தான் இங்கு வந்து பார்த்தேன். நாக்கு ஊறுது படிக்கும் போதே. பொண்ணு தூங்கிட்டு இருக்கா. எந்திரிச்சதும் கீழே போய் அவலும், வெல்லமும் வாங்கிட்டு வரனும் மற்றதெல்லாம் இருக்கு. உங்க தயிர்சேமியாவும் நாளைக்கு செய்ய இருக்கேன். எம்பொண்ணுக்கு தயிர் என்றால் இஷ்டம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வீட்டில் கைவசம் பழங்கள் இல்லாவிட்டால் மற்ற பொருட்கள் மட்டும் போட்டும் செய்யலாம். இந்த அவல் சாப்பிட்டால் வயிறு நல்ல ஃபில்லிங்க் - ஆக இருக்கும். தனிஷா மகள் எழுந்து விட்டாரா?

மாலதி அக்கா நேற்று உங்கள் பழ அவல் செய்தேன் நல்ல இருந்தது.
இதுக்கு சிகப்பு அவல் நல்ல இருக்கும் போல இருக்கு.
ஜலீலா

Jaleelakamal

மாலதி மேடம்,
ஒரு நல்ல ஈவீனிங் ஸ்னாக் இது. நான் யூஷுவலா, அவல் உடன், சர்க்கரை சேர்த்து தேங்காய்ப்பூ போட்டு சாப்பிடுவேன். உங்க குறிப்பு பார்த்ததும் இந்த முறையில் செய்து பார்த்தேன். வெல்லத்துடன் எல்லாம் போட்டு செய்தது, டேஸ்ட் ரொம்ப அருமையா இருந்தது மேடம். என் மகளும் ரொம்ப விரும்பி சாப்பிட்டாள். நல்ல ஐடியாஸ் அள்ளிக்கொடுத்த உங்க குறிப்புக்கு ரொம்ப நன்றி மேடம்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஜலீலா..!! வெள்ளை அவலை விட சிகப்பு அவல் நல்லது என்று சொல்கிறார்கள். இந்த சிற்றுண்டி அடுப்பில்லாமல் செய்வதால் ரொம்ப ஈஸியா செய்யலாம்.
நன்றி ஜலீலா..!!

சுஸ்ரீ..!! இது நல்ல ஹெல்த்தியான ஃபுட்.
நம் வீட்டு ஹாலில் அமர்ந்துகொண்டே செய்துவிடலாம். விரத நாட்களில் இதை செய்து சாப்பிடுவார்கள். வெளியூர் செல்லும்போது அவல், தேங்காய்பொடி, வெல்லம், பழவகைகள் எடுத்து சென்றால் குழந்தைகளுக்கு சுலபமாக செய்துகொடுத்துவிடலாம்.
நன்றி சுஸ்ரீ..!!

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த பழ அவலின் படம்

<img src="files/pictures/aa197.jpg" alt="picture" />

பழ அவலையும் ஃபோட்டோ எடுத்துட்டீங்களா ஜலீலா...!!! எதை செய்தாலும் ஒரு ஈடுபாட்டுடன் செய்கிறீர்கள்.......
நன்றி..!!

மாலதி அக்கா இக் குறிப்பை செய்து பார்த்தேன்.என் அம்மா தேங்காயும், சர்க்கரை மட்டும் சேர்த்து செய்வார்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும். பழங்கள் எல்லாம் சேர்த்து செய்தது மிக மிக நன்றாக இருந்தது. அருமையான குறிப்பை குடுத்த உங்களுக்கு என் நன்றிகள்.