ஜவ்வரிசி உப்புமா

தேதி: April 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நைலான் ஜவ்வரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - ஒன்று
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - கால் கப்
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் - தாளிக்க தேவையான அளவு
மல்லி, கறிவேப்பிலை - தேவைக்கு


 

ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற விடவும். ஊறிய ஜவ்வரிசியை எடுத்து ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரை வடியவிட்டு அப்படியே வடிகட்டியிலேயே வைத்திருக்கவும்.
பாசிப்பருப்பை மலர வேக விட்டு எடுத்து வைக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், தாளித்து பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
வடிகட்டி வைத்திருக்கும் ஜவ்வரிசியை வாணலியில் போட்டு கிளறி விடவும். உப்பு போடவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது.
ஜவ்வரிசியை விரலில் எடுத்து நசிக்கி பார்த்தால் நசுங்க வேண்டும். இப்போது உடைத்த கடலை, பாசிப்பருப்பு, மல்லி இலை சேர்த்து இறக்கவும்.


இந்த உப்புமாவிற்கு நைலான் ஜவ்வரிசி தான் நன்றாக இருக்கும். நைலான் ஜவ்வரிசி என்பது பார்ப்பதற்கு ட்ரான்ஸ்பரன்டாக இருக்கும். கடைகளில் கேட்டால் தருவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மாலதிஅக்கா உங்களுடைய ஜவ்வரிசி உப்புமா செய்தேன் நல்ல சுவையாக இருந்தது.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"