தேவையான பொருட்கள்
- மீன் - கால்க்கிலோ
- மாங்காய் -ஒன்று
- வெங்காயம்-ஒன்று
- பச்சைமிளகாய்-இரண்டு
- பூண்டு-நான்கு பற்கள்
- புளி பேஸ்ட்- இரண்டு தேக்கரண்டி
- ரெடிமேட் சாம்பார் பொடி-ஒரு மேசைக்கரண்டி
- மஞ்சத்தூள்-அரைத்தேக்கரண்டி.
- எண்ணெய்- இரண்டு மேசைக்கரண்டி
- கடுகு -ஒரு தேக்கரண்டி
- சோம்பு, வெந்தயம்- தலா ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை -ஒரு கொத்து
- கொத்தமல்லி -ஒரு கைப்பிடி
- உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
|
செய்முறை
- மீனை சுத்தம் செய்து துண்டுகள் போடவும்.
- வெங்காயம், பூண்டு,பச்சைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- புளிப்பேஸ்ட்டில் இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து அதில் சாம்பார் பொடி, மாங்காய்த் துண்டுகள் மற்றும் மஞ்சத்தூள், உப்புத்தூளைப் போட்டு கலக்கவும்.
- சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு, சோம்பு, வெந்தயம் ஆகியவற்றைப் போட்டு வறுத்து தொடர்ந்து வெங்காயம் பூண்டு பச்சைமிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
- அனைத்தும் வதங்கியவுடன் புளிக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கி உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
- குழம்பு நன்கு கொதித்து பச்சைவாசனை நீங்கியவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லியத்தூவி இறக்கிவிடவும்.
|
குறிப்பு:
குழம்பு சற்று கெட்டியாக இருக்கவேண்டுமானால் ஒரு தேக்கரண்டி அரிசிமாவில் சிறிது நீரில் கரைத்து மீனை போடுவதற்க்கு முன்பு ஊற்றி ஒரு நிமிடம் கொதித்த பின்பு மீனைப் போடலாம். மாங்காய் கிடைக்காவிட்டால் இரண்டு தக்காளியை கரைத்து போடலாம்.
வழங்கியவர்
மனோகரி
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2-3 நபர்களுக்கு |
10 நிமிடங்கள் |
20 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
10 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
23 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
24 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -