உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

இறால் நூடுல்ஸ்

 


தேவையானப் பொருட்கள்

  • நூடுல்ஸ் பாக்கெட் - முன்று
  • இறால் - பத்து
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • பீன்ஸ் - ஆறு
  • கேரட் - ஒன்று
  • எண்ணை - இரண்டு தேக்கரண்டி
  • பட்டர் - நான்கு தேக்கரண்டி

செய்முறை

  • மிளகு தூள் - கால் தேக்கரண்டி
  • பீன்ஸ், கேரட்டை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.
  • இறாலை சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.
  • நூடுல்ஸை முன்று பாக்கெட்டுக்கு ஆறு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு நுடுல்ஸை உதிர்த்து போட்டு அதில் உள்ள மசாலாவையும் சேர்த்து கொதிக்கவிட்டு குழையாமல் இரண்டு முன்று நிமிடத்திற்குள் வடித்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு பிறட்டி வைக்கவும்.
  • வானலியை காய வைத்து அதில் எண்ணை விட்டு கேரட் தனியாக, பீன்ஸ் தனியாகா சிட்டிக்கை உப்பு போட்டு இரண்டு நிமிடம்ம் வதக்கி எடுத்து விடவேண்டும்
  • அதே வானலியில் கொஞ்சமா பாதி பட்டர் போட்டு சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை பொடியாக அரிந்து அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் சுடுட்டவும்.
  • பிறகு அதில் வதக்கி வைத்துள்ள காய், வடித்து வைத்துள்ள் நூடுல்ஸ் போட்டு மீதி உள்ள பட்டரையும் போட்டு மிளகு தூள் தூவி கிளறி இரக்கவும்.

குறிப்பு:

தேவை பட்டால் முட்டையில் அடித்து உப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கி பட்டரில் பொரித்து உதிர்த்து அதையும் சேர்த்து கொள்ளலாம்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

முன்று நபர்களுக்கு 15 நிமிடம் 15 நிமிடம்
random food image


comments