தேவையானப் பொருட்கள்
- நூடுல்ஸ் பாக்கெட் - முன்று
- இறால் - பத்து
- மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- பீன்ஸ் - ஆறு
- கேரட் - ஒன்று
- எண்ணை - இரண்டு தேக்கரண்டி
- பட்டர் - நான்கு தேக்கரண்டி
செய்முறை
-
-
- மிளகு தூள் - கால் தேக்கரண்டி
- பீன்ஸ், கேரட்டை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.
- இறாலை சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.
-
- நூடுல்ஸை முன்று பாக்கெட்டுக்கு ஆறு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு நுடுல்ஸை உதிர்த்து போட்டு அதில் உள்ள மசாலாவையும் சேர்த்து கொதிக்கவிட்டு குழையாமல் இரண்டு முன்று நிமிடத்திற்குள் வடித்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு பிறட்டி வைக்கவும்.
-
- வானலியை காய வைத்து அதில் எண்ணை விட்டு கேரட் தனியாக, பீன்ஸ் தனியாகா சிட்டிக்கை உப்பு போட்டு இரண்டு நிமிடம்ம் வதக்கி எடுத்து விடவேண்டும்
- அதே வானலியில் கொஞ்சமா பாதி பட்டர் போட்டு சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை பொடியாக அரிந்து அதில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் சுடுட்டவும்.
- பிறகு அதில் வதக்கி வைத்துள்ள காய், வடித்து வைத்துள்ள் நூடுல்ஸ் போட்டு மீதி உள்ள பட்டரையும் போட்டு மிளகு தூள் தூவி கிளறி இரக்கவும்.
-
-
-
-
குறிப்பு
தேவை பட்டால் முட்டையில் அடித்து உப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கி பட்டரில் பொரித்து உதிர்த்து அதையும் சேர்த்து கொள்ளலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
முன்று நபர்களுக்கு |
15 நிமிடம் |
15 நிமிடம் |