தேவையானப் பொருட்கள்
- வேகவைக்க
- -----------
- அரிசி - அரை கிலோ
- துவரம் பருப்பு - இரு நூரு கிராம்
- மஞ்சள் பொடி - அரை தேக்கராண்டி
- சின்ன வெங்காயம் - பத்து
- உப்பு - இரண்டு தேக்கரண்டி
- காய் வேக வைக்க
- -----------------
- வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 200 கிராம்
- கேரட் - 1
- பீன்ஸ் - பத்து
- முல்லங்கி - 1
- முருங்கக்காய் - ஒன்று (ஒரு இன்ச் அளவு வெட்டி கொள்ளவேன்டும்)
- பச்ச மிளகாய் - முன்று
- மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- சாம்பார் பொடி - ஆறு தேக்கரண்டி
- வெல்லம் - ஒரு பிட்டு
- புளி - இரண்டு எலுமிச்சை அளவு
- தாளிக்க
- ------
- எண்ணை - ஐமது கிராம்
- கடுகு - ஒன்னறை தேக்கரண்டி
- சின்ன வெஙாயம் - ஐந்து
- கருவேப்பிலை - ஒரு கை பிடி
- வெந்தயம் - ஐந்து
- சீரகம் - அரை தேக்கரண்டி
- பூண்டு - ஆறு பல்
- நெய் - 25 கிராம்
- கொத்து மல்லி தழை - அரை கை பிடி
|
செய்முறை
- முதலில் பருப்பு அரிசி இரண்டையும் நன்கு களைந்து பத்து நிமிடம் ஊற வைக வேண்டும்.
- பிறகு அதில் மஞ்சள் பொடி ,சின்ன வெங்காயம்.போட்டு ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு குக்கரில் அரிசி பருப்பு சேர்த்து நாலைரை டம்ளர் வரும் அப்படியே டபுளாகா தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
- வெங்காயம், தக்காளி,பச்ச மிளகாய், முல்லங்கி,கேரட்,பீன்ஸ்,சேர்த்து அதில் ஒரு டம்ளர்தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவேண்டும்.
- பாதி வெந்து கொண்டிருக்கும் போது சாம்பார் பொடியை சேர்க்கவும்.
- பிறகு புளியை கரைத்து ஊற்றவும்.
- முருங்கக்காயை தனியாக வேகவைத்து சேர்க்கவும்.
- இப்போது வெந்த பருப்பு சாதத்தில் வெந்து வைத்துள்ள காய ஊற்றி பாதி நெய்யும் சேர்த்து கிளறவேண்டும்.
- கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிந்து கொட்டி மீடி நெய், கொத்து மல்லி தழை சேர்த்து கிளறி அப்பளத்துடன் சாப்பிடவும்.
- கமகமண்ணு நெய் மணத்தோடு மணக்கும் சாம்பார் சாதம் ரெடி
|
குறிப்பு:
முருங்கககாயை முதலே போட்டால் குழைந்து விடும்.தனிய கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பின்ச் உப்பு, மஞ்சள் பொடி ஒரு பின்ச் போட்டு வெந்து அதை சேர்க்கனும் அப்ப அது முழுசக இருக்கும். காய் கொஞ்சம் கல்லு மாதிரி உள்ள காய் போடனும், குழைந்து போகிற காய்கள் போட கூடாது, தனியா செய்கிற சாம்பாருக்கு ஒகே.
தேவை பட்டால் உப்பு கூட சேர்த்து கொள்ளுங்கள்.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
ஆறு நபர்களுக்கு |
30 நிமிடம் |
30 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
17 நிமிடங்கள் 58 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -