உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பட்டை பொடி டீ

 

டீயில் பல விதம் உண்டு சில பொருட்கள் சேர்த்து குடிப்பதால் பல உடல் உபாதைகள் தீரும். இதில் மிளகு டீ, கரம் மசாலா டீ, பட்டை பொடி டீ யும் ஒன்று.டீ போடுவது போல் போட்டு இந்த பொடியை சேர்க்கனும்.

தேவையானப் பொருட்கள்

  • தண்ணீர் - ஒரு டம்ளர்
  • பால் - ஒரு டம்ளர்
  • டீ தூள் - ஒரு தேக்கரண்டி
  • சர்க்கரை - இரண்டரை தேக்கரண்டி
  • பட்டை பொடி - அரை தேக்கரண்டி

செய்முறை

  • பால், தண்ணீர்,சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு கொதி வந்ததும் டீ தூள் போட்டு இரண்டு கொதிகொதிக்க விட்டு வடித்து விட வேண்டு,
  • பிற்கு பட்டை பொடி அரை தேக்கரண்டி போடு கலக்கி குடிக்கவும்.

குறிப்பு:

இந்த பட்டை பொடிய பற்றி சொல்லனும் என்றால் நிறைய சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு நல்லது உடல் உபாதிகளுக்கு ஆகையால் தான் இஸ்லாமியர்கள் எது தாளிக்கும்போதும் பட்டை இல்ல்லமல் செய்ய மாட்டார்கள். பல தர நோய்கள் இருமல்.தலிவலி,வெயிட் குறைய, ஹய் பிரெஷர் குறைய,உரினரி இன்பெக்ஷனுக்கு இன்னும் பல இந்த பட்டை பொடியை வெண்ணீரில் தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. பிடிக்காதவர்கள் இந்த மாதிரி டீ செய்து குடிக்கலாம்.மீதி பலன் கள் ஞாபகம் வரும் போது எழுதுகிறேன். ஆ பல் வலிக்கு கூட நல்லது.பெண்கலுக்கு ஏற்படும் பல தொந்தரவு களுகு கூட நல்லது, கேன்சர் நோயை கட்டு படுத்தும்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

இரண்டு நபர்களுக்கு 5 நிமிடம் 5 நிமிடம்
random food image


comments
பட்டை டீ.... புது செய்தி....
ஏப்ரல் 24, 2008 - 3:14pm - வழங்கியவர் இலா

பட்டை (cinnamon bark ) பெண்களுக்கு ஹார்மோன்களை சமன்( balance) செய்யும்... சர்க்கரை வியதியஸ்தர்களுக்கு மிகவும் நல்லது .இங்கு diabetics intha மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள்....

---ILA
Hope is just the part of the equation

டீ நல்ல மெசேஜ்
ஏப்ரல் 25, 2008 - 5:23am - வழங்கியவர் Jaleela Banu

இலா பட்டை பொடி டீ நல்ல மெசேஜ்
யாராவது வெயிட் குறைக்க நினைக்கிறீர்களா இதை டெய்லி குடிங்க.

பட்டை பற்றி இன்னும் நிறைய தகவல் இருக்கு
ஜலீலா

jalilaakka
ஏப்ரல் 25, 2008 - 12:18pm - வழங்கியவர் jannath

ஜலிலாக்கா அஸ்ஸலாமு அலைக்கும் பட்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று தெரியாமலெ அதனை பயன்படுதிக்கொன்டு இருக்கிறேன்,இப்பொழுது உங்களால் பட்டையின் மருத்துவ குணங்களை தெரிந்துகொள்ளமுடிந்தது. நன்றி.குறிப்புகளுடன் அதன் நன்மைகளையும் எழுதுவதால் தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது.once again thanks to u and arusuvai.

ஜன்னத் ,அதிரா அஸ்ஸ்லாமு அலைக்கும்
ஏப்ரல் 26, 2008 - 2:02am - வழங்கியவர் Jaleela Banu

ஜன்னத் அஸ்ஸ்லாமு அலைக்கும்.

நான் சாதாரணமாக இதை பற்றி சொல்ல போனேன் எல்லோருக்கும் உபயோகப்படுகிறதா?
ரொம்ப சந்தோஷம்.

அதிரா கரெவான்னு சொல்வது எனக்கு புரியவில்லை, இதுவான்னு பாருங்கள்.
எங்களுக்கு இங்கு பட்டை பொடி நல்ல பைன் பவுடர் கிடக்குது அதை தனியக வாங்கி வைத்துள்ளேன்.
தேவைக்கு போட்டு குடித்து கொள்வேன்.
ஜலீலா

ஜலீலாக்கா,
ஏப்ரல் 26, 2008 - 2:07am - வழங்கியவர் அதிரா

அந்த போத்திலில் உள்ள பெயரை நினைவில்லதுவிட்டால் , பின்னர் பார்த்து அப்படியே எழுதுங்கள், நான் இங்கு ஆசியாக் கடைகளில் தேடிப் பார்க்கிறேன். கறுவா பட்டை என்பது கறிகளுக்கு வாசத்திற்காகச் சேர்ப்போமே அதுதான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பட்டை டீயும்_ஜலீலாவும்
மே 1, 2008 - 3:24am - வழங்கியவர் Parveen banu

அன்புள்ள ஜலீலா நலமா இருக்கீங்களா?பசங்க நலமா?
உங்களால் பட்டை தூளை டீக்கு ரெண்டு நாளா போட்டு குடிக்கிறேன்.சக்கரை நோய்க்கும் நல்லதுன்னு சொல்லியிருக்கீங்க எங்க அம்மாக்கும் குடிக்க சொல்லி சொல்ல இருக்கிறேன்.பட்டையும் தேனும் ரொம்ம நல்லதுன்னு கேள்விபட்டுள்ளேன்.ஆனால் தேனுடன் சாப்பிட பிடிக்கவில்லை.டீயில் போட்டு குடிக்க ஈசீயாக இருக்கு.இஞ்சி டீயிம் அப்பொ அப்போ குடிக்கிரேன்.இதில் இவ்லோ மருத்துவ குணங்களா என்று ஆச்சிரியமா இருக்கு.இன்னும் இது போல நிறைய்ய எலுதுங்கள்.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

பர்வீன் (பட்டை டீ)
மே 5, 2008 - 12:32am - வழங்கியவர் Jaleela Banu

வா அலைக்கும் அஸ்ஸலாம் பர்வீன்
குழந்தைகள் நலமா? உங்களுக்கு வாய் புண்ணு இப்போது எப்ப்டி இருக்கு, தலைவலி.

பட்டை பொடியை வெண்ணீரில் கலக்கி, அதில் தேன் சேர்த்து குடிக்கனும்.
நம்மால் அது முடியாது டீ என்றால் உடனே குடித்து விடலாம், இதை பிளாக் டீயிலும் குடிகலாம்.

ரொம்ப நல்லது. இதில் நான் குறிப்பிட்டுள்ள மருத்துவ குணம் கம்மிதான் இன்னும் நிறைய இருக்கு

ஜலீலா

பதில் பார்த்து சந்தோஷம் ஜலீலா!
மே 5, 2008 - 7:13am - வழங்கியவர் Parveen banu

அன்புள்ள ஜலீலா
உங்கள் பதில் பார்த்து ரொம்ப சந்தோஷம்.வாய்புண் நன்றாக்கிவிட்டது.தலைபாரமும் பரவாயில்லை.
இப்போதான் அறுசுவையே களைகட்டி இருக்கு.உங்கள் வெளிப்படையான பேச்சும் எதார்த்த குணமும் ,உதவும் குணமும் அனைவரையும் கவந்திருக்கிறது.மாஷா அல்லாஹ்.எப்போதும் போல நீங்கள் தொடர்ந்து எலுத இறைவன் அருள் புரிவானாக.

அன்புடன் பர்வீன்.