பேச்சுலர்ஸ் பருப்பு கீரை

தேதி: April 24, 2008

பரிமாறும் அளவு: 4நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - அரைகோப்பை
ஃபுரோசன் ஸ்பைனாச் - ஒரு பாக்கெட்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
புளி பேஸ்ட் - அரைத்தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள்
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி.


 

கீரையை மைக்ரோ அவனில் அல்லது வெந்நீரில் பாக்கெட்டை பிரிக்காமல் அப்படியே போட்டு ஐஸ்ஸை உருகவிடவும்.
பருப்பை சுத்தம் செய்து குக்கரில் போட்டு இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து அதில் மஞ்சள்தூள், சீரகம், வெங்காயம், தக்காளி மற்றும் தூள்வகைகளைப் போட்டு பருப்பை குழைய விடாமல் வேகவைக்கவும்.
பிறகு அதில் கீரை, உப்பு மற்றும் புளி பேஸ்ட்டைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவிடவும்.
ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை சூடாக்கி கடுகை பொரியவிட்டு பிறகு அனைத்து தாளிப்பு பொருட்களையும் போட்டு சிவக்க வறுத்து கீரையில் கொட்டி இறக்கிவிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி அக்கா நான் இந்த பருப்பு கீரையை செய்தேன். வழக்கமாக செய்யும் கீரையிலிருந்து இது வித்தியாசமாகவும் மிகவும் நன்றாக இருந்தது. செய்வதற்கும் எளிது. நன்றி உங்களுக்கு

நன்றி வானதி, நீங்க கூறுவதும் உண்மை தான் மிகவும் சுலபமாக கீரைக் குழம்பு செய்வதென்றால் இந்த முறை சிறந்ததாக இருக்கும் இன்றைக்கு இந்த குழம்பைத்தான் செய்தேன். இது உங்களுக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சியே பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஹலோ மனோகரி அக்கா எங்க வீட்டில் பிரோஜன் கீரை இல்லை. fபிரஷ் ஆன கீரை தான் உள்ளது. அதனால் கீரையை முதலில் வேக வைத்துதான் கொட்ட வேண்டுமா? அல்லது வேக வைக்காமல் கொட்டிவிட்டால் வெந்து விடுமா?

ஃபிரஷ் கீரையை பருப்புடன் சேர்த்தே வேகவிட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற விட்டு தாளித்துவிடுங்க, பருப்பு முக்கால் பதத்தில் வெந்தால் போதும் கீரையையும் அதிகமாக வேகவிட கூடாது ஓகேவா.டிரை செய்து பாருங்க நன்றாக இருக்கும்.

அக்கா பருப்பு கீரை செய்தேன். நன்றாக இருந்தது. பருப்பை வேக வைத்து அதில் கீரையை கொட்டி அடுப்பில் சிம்மிலே வைத்து சமைத்தேன். கடைசியாக வத்த்ல்,சோம்பு,சீரகம் மூன்றும் சேர்த்து திரித்த தூள் சேர்த்தேன். சுவை நல்லா இருந்தது. நன்றி அக்கா

நன்றி அரசி,பருப்பு கீரையை சுவைப்பட சமைத்துவிட்டீர்கள் பாராட்டுக்கள், கூடவே அதில் சேர்த்த பொடியையும் கூறியுள்ளீர்கள் நானும் அதைப் போல் செய்து பார்க்கின்றேன், தங்கள் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.