www.arusuvai.com
பேச்சுலர்ஸ் பருப்பு கீரை
தேவையானப் பொருட்கள்
- துவரம்பருப்பு-அரைகோப்பை
- ஃபுரோசன் ஸ்பைனாச்- ஒரு பேக்கட்
- வெங்காயம்-ஒன்று
- தக்காளி-ஒன்று
- சீரகம்-அரைத் தேக்கரண்டி
- மஞ்சத்தூள்-அரைத்தேக்கரண்டி
- மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி
- பெருங்காயத்தூள்-கால்த் தேக்கரண்டி
- புளி பேஸ்ட்-அரைத்தேக்கரண்டி
- உப்பு-ஒரு தேக்கரண்டி
- =========
- கடுகு,உ.பருப்பு-தலா ஒரு தேக்கரண்டி
- காய்ந்தமிளகாய்-இரண்டு
- கறிவேப்பிலை-ஒரு கொத்து
- நசுக்கிய பூண்டு-இரண்டு பற்கள்
- எண்ணெய்-மூன்று தேக்கரண்டி.
செய்முறை
- கீரையை மைக்ரோ அவெனில் அல்லது,வெந்நீரில் பாக்கட்டை பிரிக்காமல் அப்படியே போட்டு ஐஸ்ஸை உருகவிடவும்.
- பருப்பை சுத்தம் செய்து குக்கரில் போட்டு இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து அதில் மஞ்சத்தூள், சீரகம், வெங்காயம்,தக்காளி மற்றும் தூள்வகைகளைப் போட்டு பருப்பை குழைய விடாமல் வேகவைக்கவும்.
- பிறகு அதில் கீரை,உப்பு, மற்றும் புளி பேஸ்ட்டைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவிடவும்.
- ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை சூடாக்கி கடுகை பொரியவிட்டு பிறகு அனைத்து தாளிப்பு பொருட்களையும் போட்டு சிவக்க வறுத்து கீரையில் கொட்டி இறக்கிவிடவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4நபர்களுக்கு |
10 நிமிடங்கள் |
15நிமிடங்கள் |