www.arusuvai.com
பேச்சுலர்ஸ் முட்டை ஃபிரைட் ரைஸ்
தேவையானப் பொருட்கள்
- வேகவைத்த சாதம்-இரண்டு கோப்பை
- முட்டை - இரண்டு
- நறுக்கிய வெங்காயம்-ஒன்று
- இஞ்சி பூண்டு நசுக்கியது-தலா ஒரு தேக்கரண்டி
- மிளகுத்தூள்- அரைத் தேக்கரண்டி
- சோயா சாஸ்- ஒரு மேசைக்கரண்டி
- சில்லி சாஸ்- ஒரு தேக்கரண்டி
- குடமிளகாய்,கேரட்,பட்டாணி-தலா கால்க்கோப்பை
- உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
- எண்ணெய்- இரண்டு மேசைக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி-இரண்டு தேக்கரண்டி.
செய்முறை
- மைக்ரோஅவெனில் வைக்கக்கூடிய பீங்கான் கோப்பையில் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சி பூண்டைப் போட்டு அவெனில் ஐந்து நிமிடம் வேகவிடவும்.
- பிறகு அதை வெளியில் எடுத்து வேகவைத்த சாதம், காய்கறிகள்,உப்புத்தூள், மிளகுத்தூள்,மற்றும் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கி மைக்ரோஅவெனில் எட்டு நிமிடத்திற்க்கு வேகவிடவும்.
- பிறகு அதன் மீது சாஸ் வகைகளை மேலாக ஊற்றி நன்கு கலக்கி மீண்டும் இரண்டு நிமிடம் வைத்திருந்து கொத்தமல்லியைத்தூவி சூடாக பரிமாறவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 நபர்களுக்கு |
10 நிமிடங்கள் |
15 நிமிடங்கள் |