உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

முட்டைக் குழம்பு

 


தேவையானப் பொருட்கள்

  • கலக்க
  • =======
  • முட்டை - 3
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 வெங்காயம்
  • பச்சை மிளகாய் - 1
  • குழம்புக்கு
  • =============
  • பட்டை - 1 துண்டு
  • ஏலம் - 1
  • வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி&பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
  • தக்காளி - 1
  • மல்லி இலை - 1/4 கப்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  • மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
  • தேங்காய்ப் பால் - 3/4 கப்
  • எண்ணை - 3 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் எண்ணையை காயவைத்து அதில் பட்டை,ஏலம் இட்டு பொரிந்ததும் வெங்காயம் ,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  • நன்கு வதங்கி பொன்னிறமானதும் இஞ்சி&பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  • பின் தக்காளி மல்லி இலை மற்றுள்ள பொடிகளை சேர்த்து நன்கு வதங்கி தக்காளி உடைந்து மைய்யாகும் வரை வதக்கவும்
  • பின் தேங்காய்ப் பால் சேர்த்து உப்பு சேர்த்து இளம் தீயில் கொதிக்க விடவும்
  • அதே சமயம் கலக்கக் கொடுத்துள்ள முட்டை,மிளகாய்,வெங்காயம் சிறிது உப்பு சேர்த்து அடித்து பனியாரம் சுடும் சிறிய குழிசட்டியில் சிறிது எண்ணை விட்டு கலக்கிய முடைகளை குழியில் ஊற்றி இருபுறமும் வறுத்து எடுக்கவும்..பின்பு முட்டைகளை கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
  • மிகவும் சுவையான முட்டைக் குழம்பு தயார்

குறிப்பு:

3 முட்டை இருந்தால் 5 பேர் சாப்பிடலாம்.அதுவும் அழகாக பந்து போல சுவையாக இருக்கும் குழம்பில்.

வழங்கியவர்

தளிகா

random food image


comments
தளிகா,
ஏப்ரல் 29, 2008 - 7:36pm - வழங்கியவர் VidhyaSaravanan

என்னிடம் பணியார குழி/ தாளிக்கும் இரும்பு கரண்டி இல்லை. முட்டைகளை வேறு எவ்வாறு பந்து போல் செய்யலாம்? எதுவும் ஐடியா தோன்றினால் கூறவும். இல்லை என்றால் முட்டையை அடையாக ஊற்றி குழம்பு வைக்கவா?

ஹாய் வித்யாநந்தினி
ஏப்ரல் 29, 2008 - 9:18pm - வழங்கியவர் aniaksh

ஹாய் வித்யாநந்தினி,
என் ப்ரன்டோட அம்மா முட்டையை நல்லா அடிச்சு, இட்லி தட்டுல இட்லி ஊத்தற மாதிரியே சின்னசின்னதா ஊத்தி வேக வைத்து எடுத்து குழம்பில் போடுவாங்க. ட்ரை பண்ணிப்பாருங்க. நல்லா இருக்கும்.
Rajini

வித்யா
ஏப்ரல் 29, 2008 - 11:02pm - வழங்கியவர் thalika

வித்யா இதனை ஒரு நாள் நான் குழிப்பாத்திரத்தில் ஊற்றும் சலிப்பில் அடை போல செய்து(ஆம்லெட்) கட் பன்னி போட்டேன் ஆனால் அது ஒரு மாதிரி கசமுசா என்று குழம்பு அசிங்கமாக ஆகிவிட்டது மற்றபடி சுவை நல்ல இருக்கும்.அனி சொல்வது நல்ல ஐடியா..இவ்வளவு மெனக்கெட முடியாட்டால் முட்டையை முழுவதும் வேக வைத்து வெள்ளையில் கீறி போடலாம்

நன்றி தளிகா, நன்றி அனி
ஏப்ரல் 30, 2008 - 5:31pm - வழங்கியவர் VidhyaSaravanan

தளிகா அனி சொல்லும் முறையில் முட்டையை வேக வைத்து, குழம்பு வைத்து விட்டு சொல்கிறேன். நன்றி தளிகா, நன்றி அனி