உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

கறி பணிஸ் / கறி பன் & பிரெட் ஸ்டிக்

 


தேவையானப் பொருட்கள்

  • மைதா மா - 2 1/2 கப்
  • ஈஸ்ட் - 1 பக்கட் (0.25oz or 7g)
  • சீனி - 2 1/2மேசைக்கரண்டி
  • ஒலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பட்டர் - 1 மேசைக்கரண்டி
  • சீனிச்சம்பல் அல்லது உருளைக்கிழங்கு கறி அல்லது ஏதாவது பிடித்தமான கறி - 1 கப்
  • காய்ந்த பார்ஸ்லி/பேசில்/எள்ளு - 1 மேசைக்கரண்டி

செய்முறை

  • 1/4 கப் மிதமான சூடுள்ள தண்ணீரில் 1/2 மேசைக்கரண்டி சீனி, ஈஸ்ட்டைப்போட்டு கரைத்து 10 நிமிடங்களுக்கு விடவும்.
  • பின்னர் இந்த கரைசலினுள் மைதாமா, உப்பு, ஒலிவ் எண்ணெய், மீதி சீனி சேர்த்து சப்பாத்திக்கு குழைப்பது போல தண்ணீர் அல்லது பால் விட்டு மிருதுவாக வரும்வரை குழைக்கவும்.
  • பின்னர் ஒரு எண்ணெய் பூசிய பாத்திரத்தில் போட்டு மூடி 1 1/2 மணித்தியாலங்களுக்கு விடவும்.
  • இப்போது மா ஊதி இரு மடங்காகி இருக்கும். இதனை மீண்டும் 3 / 4 நிமிடங்களுக்கும் குழைக்கவும்.
  • கறி பணிஸ் :- பின்னர் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல தட்டி நடுவில் கறியை வைத்து மூடி ஒட்டி ஒரு பேக்கிங் தட்டில் நன்கு இடைவெளி விட்டு அடுக்கவும்.
  • பின்னர் உருக்கிய பட்டரை ஒரு பிரஷின் உதவியால் பணிஸ்களின் மீது பூசவும்.
  • பிரெட் ஸ்டிக்:- மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டில் போட்டு நீளமாக கோல் போல உருட்டி ஒரு பேக்கிங் தட்டில் அடுக்கவும்
  • பின்னர் உருக்கிய பட்டரை ஒரு பிரஷின் உதவியால் பிரெட் ஸ்டிக்குகளின் மேல் பூசவும்.
  • பின்னர் காய்ந்த பார்ஸ்லி/பேசில்/எள்ளு (ஏதாவது ஒன்றை) இதன் மேல் தூவவும்
  • பணிஸ்/பிரெட் ஸ்டிக் இரண்டையுமே மூடி மீண்டும் 1 மணித்தியாலம் வைக்கவும்.
  • அவனை 350 F இல் முற்சூடு பண்ணவும்.
  • பின்னர் பணிஸ், பிரெட் ஸ்டிக்கை 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  • சுவையான கறி பணிஸ், பிரெட் ஸ்டிக் தயார். மாலை அல்லது இரவு உணவாக கெட்சப் / சட்னியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு:

கறி பணிஸிற்கு வைக்கும் கறி தண்ணியாக இல்லாமல் தடிப்பானதாக இருக்க வேண்டும். குழைத்த மாவை பிற்ஸா செய்வதற்கு பிற்ஸா க்ரஸ்டாகவும் (pizza crust)பயன்படுத்தலாம். பணிஸ்/பிரெட் ஸ்டிக் சிறிது இனிப்பு சுவையுடன் இருக்க வேண்டுமானால் மாவுடன் சிறிது அதிகமாக சீனி சேர்த்தும் குழைக்கலாம். பிரெட் ஸ்டிக் தனியே செய்வது என்றால் மாவுடன் சேர்த்து உள்ளி பேஸ்ட் அல்லது காய்ந்த பேஸில்/எள்ளு சேர்த்தும் குழைத்து வைக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி பிரெட் ஸ்டிக்கை விரும்பிய வடிவங்களிலும் செய்யலாம். உ+ம்: பாம்பு, பின்னல், இதயம், பிரெட்ஸில் shape etc.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 or 4 நபர்களுக்கு) 20 நிமிடங்கள் 2.5 மணித்தியாலம்
random food image


comments