லோ பிரெஷர் உள்ளவர்கள் தீடிர் திடீருன்னு மயக்கடிச்சி கீழே விழுந்து விடுவார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அரு மருந்து. புதினா எல்லா நேரமும் வீட்டில் இருக்காது வாங்கினாலும் பதினைந்து நாள் பிரிட்ஜில் இருக்கும், அப்படி லோ பிரெஷர் உள்ளவர்கள் அடிக்கடி மயக்கம் வருபவர்கள், தலை சுற்றல் இருப்பவர்கள், நிறைய புதினா வாங்கி காய வைத்து அத்துடன் சுக்கு, ஏலக்காய் சேர்த்து பொடித்து பவுடர் செய்து வைத்து கொண்டால் தேவைக்கு ஒரு டம்ளருக்கு ஒரு தேக்கரண்டி வீதம் டீ தூள் போடும் போது இதையும் சேர்த்து போட்டு கொதிக்க வைத்து வடித்து குடிங்கள்.
தேவையானப் பொருட்கள்
- பால் - ஒரு டம்ளர்
- தண்ணீர் - ஒரு டம்ளர்
- சர்க்கரை - முன்று தேக்கரண்டி
- டீ தூள் - ஒரு தேக்கரண்டி
- புதினா - அரை கை பிடி
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
செய்முறை
- பால் தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும் கொதி வரும் போது டீ தூள் போடு ஒரு துண்டு இஞ்சியும் சேர்த்து நல்ல பொங்கும் வரை கொதிக்க விட்டு வடித்து விடுங்கள் உடனே புதினாவை மண்ணில்லாமல் கழுவி சூடான டீயில் போடு இரண்டு நிமிடம் மூடி வையுங்கள் பிறகு வடித்து குடிக்கவும்.
-
குறிப்பு
ஆகா ஒரு புத்துணர்வு கிடைக்கும், வீட்டு வந்தவர்கள் உடனே கேட்பார்கள் என்ன டீ என்று.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 person |
5min |
5 min |